டிரம்ப் பேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டுகள் 'சஸ்பெண்ட்'

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டுகள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் , ஜோ பைடன் வெற்றி பெற்றார். டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனவரியில் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள்,

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டுகள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.



latest tamil news



அமெரிக்க அதிபர் தேர்தலில் , ஜோ பைடன் வெற்றி பெற்றார். டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனவரியில் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள், பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்.


latest tamil news



இந்நிலையில் வன்முறையை துாண்டும் வகையில், பேஸ்புக் சமூக வலைதளத்தில், டிரம்ப் பதிவிட்ட கருத்துகள் தான் காரணம் என, கூறப்பட்டது. டிரம்பின் கணக்கை சஸ்பெண்ட் செய்வது குறித்து மேற்பார்வை நிபுணர்கள் குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. 'சஸ்பெண்ட்' செய்யட்டதை, நிபுணர்கள் ஏற்றனர். இதையடுத்து, டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2023-ம் ஆண்டு ஜனவரி வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், பொது பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் டிரம்பின் பேஸ்புக் கணக்கை மீண்டும் அனுமதிப்பது என பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
06-ஜூன்-202102:46:04 IST Report Abuse
Ram Ram தனியார் நிறுவனங்கள் எதேச்சதிகாரத்துடன் செயல்படுவதை உலக அரசுகள் தடை செய்து கடிவாளம் போட வேண்டும்
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
05-ஜூன்-202117:11:09 IST Report Abuse
Kumar ஆபிரகாமிய மதங்களின் எதேச்சாதிகாரத்தை பற்றி கூறிய ரஜனிஷ் என்னும் ஓஷொவை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது இந்த உலகிற்கு நன்கு தெரியும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
05-ஜூன்-202115:35:01 IST Report Abuse
சுடலை மாடசாமி facebook account close பண்ணினதால் avaru அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப் படுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X