ஊரடங்கு தளர்வில் கருத்து வேறுபாடு: சிவசேனா கூட்டணிக்குள் விரிசலா?

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் ஊரடங்கு தளர்வு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜய் வாடேட்டிவரின் அறிவிப்பை முதல்வர் உத்தவ் தாக்கரே மறுத்து உள்ளதை அடுத்து, ஆளும் கூட்டணிக்குள் இணக்கமற்ற சூழல் நிலவுகிறது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக
Uddhav Thackeray, Maharashtra CM, MVA govt, credit wars

மும்பை: மஹாராஷ்டிராவில் ஊரடங்கு தளர்வு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜய் வாடேட்டிவரின் அறிவிப்பை முதல்வர் உத்தவ் தாக்கரே மறுத்து உள்ளதை அடுத்து, ஆளும் கூட்டணிக்குள் இணக்கமற்ற சூழல் நிலவுகிறது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவ துவங்கியதை அடுத்து, மாநிலம் முழுதும், தளர்வுகள் அற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், காங்.,கை சேர்ந்த மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடேட்டிவர், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், 'தொற்றுப் பரவல் குறைவாக உள்ள 18 மாவட்டங்களில், நாளை முதல் ஊரடங்கு உடனடியாக தளர்த்தப்படுகிறது.

மற்ற மாவட்டங்களில் ஐந்து கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்படும்' என்றார். இந் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:கொரோனா தொற்று பரவல் முழுமையாக குறைய வில்லை. கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எந்த முடிவும் எட்டப்படவில்லை.


latest tamil newsஐந்து கட்டங்களாக ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.ஊரடங்கு தளர்வு குறித்து ஆளும் கூட்டணி அரசுக்குள், இருவேறு விதமான கருத்துகள் வெளியாகி உள்ளதை அடுத்து, ஆளும் மஹா விகாஸ் கூட்டணிக்குள் இணக்கமற்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் கடம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு நெருக்கடியான சூழல்களில், மஹா விகாஸ் கூட்டணிக்குள் இதுபோன்ற மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுகின்றன. கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகிறது.தேசிய கட்சியான காங்கிரஸ் மீது, மற்று இரு மாநில கட்சிகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன. இந்த சண்டையில் கூட்டணி தானாகவே கவிழ்ந்துவிடும். 'ஆப்பரேஷன் லோட்டஸ்' போன்ற உத்திகள் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
05-ஜூன்-202118:25:35 IST Report Abuse
Loganathaiyyan ஆளும் கூட்டணிக்குள் இணக்கமற்ற சூழல்?????இதெல்லாம் சர்வ சகஜம்???இதை ஊதிப்பெரிதாக்கினால் உடனே முஸ்லீம் நேரு காங்கிரசில் இருந்து இந்த மீடியாவுக்கு பணம் வரும் பிறகு அடக்கி வாசிப்பார்கள் அவ்வளவே???இதெல்லாம் பணம் செய்யும் ஒரு சிறந்த டெக்னீக் அவ்வளவே???
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
05-ஜூன்-202115:03:02 IST Report Abuse
P.K.SELVARAJ இங்கே புதுச்சேரியில் 27 நாட்களாக மந்திரி சபை அமைக்க முடியலே? இதில் மகாராஷ்டிரா கூட்டணி அரசு குறித்து செய்தி.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-ஜூன்-202113:05:02 IST Report Abuse
M  Ramachandran இப்போ காங்கிரஸ் முதல்வரின் பாதுகாவலர்கள் தொற்றி கொண்டு பயணிப்பது போல் பொய் கொண்டிருக்கிறது. காங்கிரஸுக்கும் வேறு வழியில்லை. எங்காவது ஓரிடத்தில் தலை காட்டமுடிகிறதே என்ற விரக்தியில் நாட்களை கடத்தி கொண்டிருக்கிறது. அன்கு நான்ஙகு குருடர்களும் யானையும் கதை நடந்து கொண்டிருக்கிறது. யானை என்று முட்டி தள்ளுகிறதோ தெரியவில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X