பொது செய்தி

இந்தியா

அமெரிக்க தடுப்பூசிகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்குமா? மத்திய அரசு ஆலோசனை

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவின், 'மாடர்னா' மற்றும் 'பைசர்' நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்க அனுமதி கேட்டு, அமெரிக்காவின், பைசர், மாடர்னா நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதற்கு மத்திய அரசு, 'உங்கள் தடுப்பூசிகளை எங்கள் நாட்டிலும் சோதிக்க வேண்டும். அதன் முடிவுகளின்
US vaccine, Corona Vaccine, Covid 19 vaccine

புதுடில்லி: அமெரிக்காவின், 'மாடர்னா' மற்றும் 'பைசர்' நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்க அனுமதி கேட்டு, அமெரிக்காவின், பைசர், மாடர்னா நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதற்கு மத்திய அரசு, 'உங்கள் தடுப்பூசிகளை எங்கள் நாட்டிலும் சோதிக்க வேண்டும். அதன் முடிவுகளின் அடிப்படையில் விற்பனைக்கு அனுமதி அளிப்போம்' என, தெரிவித்தது.

இதை, இரு நிறுவனங்களும் ஏற்கவில்லை. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவியுள்ள நிலையில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாடர்னா, பைசர் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக சட்ட ரீதியான பாதுகாப்பு கொடுக்க ஆலோசித்து வருவதாக தெரிகிறது.


latest tamil newsஇந்த பாதுகாப்பு வழங்கப்பட்டால், மாடர்னா அல்லது பைசர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள், பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டால், இந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கும் நோக்கில், இந்த நிறுவனங்களுக்கு இந்த சலுகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியதாவது: அமெரிக்கா மட்டுமின்றி, பல ஐரோப்பிய நாடுகளிலும் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பைசர் தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், நம் நாட்டிலும் குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசி போட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஜூன்-202123:49:30 IST Report Abuse
தமிழவேல் இந்த இரண்டு ஊசி களும், உலகில் """எத்தனையோ கோடி""" பேர் களுக்கு போடப்பட்டும் நமக்கு எதற்க்கு தயக்கம் ?
Rate this:
Cancel
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
05-ஜூன்-202118:00:22 IST Report Abuse
Ramasamy மக்களை வற்புறுத்தியும், பயமுறுத்தியும், விளம்பரங்கள் மூலமும் கோரோணா தடுப்பூசி போட வைக்க முயற்சிக்கிறார்கள். தடுப்பூசி போட்ட பலரும் அதன் பின்பு கோரோணா வந்து இறந்து இருக்கிறார்கள். கண்பிரச்சனை, உடல் பாதிப்புகள், மாரடைப்பு என பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்கள். தடுப்பூசியின் உண்மை நிலமையை டாக்டர்கள், who அமைப்பு, அரசு அதிகாரிகள், மத்திய மாநில அரசுகள் மறைக்கிறார்கள். ஒவ்வொரு தடுப்பூசிகள் நிறுவனமும் வருடத்திற்கு 80 கோடி டோஸ் தயார் செய்ய போவதாக சொல்லியுள்ளார்கள். விலையோ ரூ.600, ரூ.800, ரூ.995, ரூ.1195 என நிர்ணயம் செய்துள்ளார்கள். இதில் ரூ.100 ஒரு டோசுக்கு கமிஷன் கொடுத்து விட்டாலே அது ரூ.8000 கோடி வந்துவிடும். மேலே சொன்ன அனைவருக்கும் இப்படி ரூ.100, ரூ.50 ஒரு டோசுக்கு கமிஷன் உள்ளது. இந்த கமிஷன் பேச்சு வார்த்தை முடிந்ததும் அனைத்து அனுமதியும் கிடைத்துவிடும். அதன் பின்னர் மக்களை மூளை சலவை செய்ய தொடங்கி விடுவார்கள். இது தான் உண்மை.
Rate this:
Cancel
05-ஜூன்-202110:16:01 IST Report Abuse
Srinivasan Venkatesan it is their main order , if India needs their vaccine India must have to buckle to their requirements.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X