கடைகள் திறக்கும் நேரம் என்ன ? ஊரடங்கு புதிய அறிவிப்புகள்

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (131) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு, நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:* தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும் . * காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும்
தமிழகம், ஊரடங்கு, நீட்டிப்பு,

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு, நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
* தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும் .
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது . 7 முதல் 14 ஆம் தேதி காலை வரை தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது . கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் தொற்று குறையாததால் , அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . 11 மாவட்டங்களில் மகளிகை , பல சரக்கு காய்கறி கடைகள் , மீன் கடைகள் , நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் . மீன் சந்தைகளை திறந்த வெளியில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் . இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது . தீபெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் . பத்திர பதிவுகள் செய்ய 50 சதவீத டோக்கன்கள் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருவதால் 11 மாவட்டங்களில் அறிவித்த தளர்வுகளோடு , கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அரசு அலுவலங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் . ஹவுஸ் கீப்பிங் பணியில் உள்ளவர்கள் இ பாஸுடன் பணிக்கு போகலாம் . மின் பணியாளர், பிளம்பர் , கம்யூட்டர் ரிப்பேர் செய்பவர் , தச்சர் ,மெக்கானிக்குகள் , ஹார்டுவேர் கடைகள் , ஸ்டேஷனரி கடைகள் , காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி டேக்சி, ஆட்டோவில் இ பாஸுடன் இரண்டு பேர் பயணம் செய்யலாம் , அவரச தேவைக்கு மட்டும் கொடைக்கானல் , ஏற்காடு , ஏலகிரி , குற்றாலம் செல்ல இ பாஸுடன் பயணம் செய்யலாம் . கோவை , திருப்பூர் , சேலம் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , திருச்சி , மதுரையில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் . நடமாடும் மளிகை , காய்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும் .

* மீன் சந்தைகள் மொத்த விற்பனை சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்கண்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்
* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இபதிவுடன் அனுமதிக்கப்படும்.
* எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம் .
* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல), காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும் .
* ஹார்டுவேர் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .
* வாகனங்களின் உதிரிபாக விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம் .
* கல்விப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறக்கப்பட வேண்டும்.
* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.
* வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் பயணிக்க அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டுபயணிகள் மட்டும் செல்லலாம்.


latest tamil news
11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்ன ?


கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இம்மாவட்டங்களில் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்படுகிறது.
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக்கடைகள் காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன்சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்
* இறைச்சிக் கடைகள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.இபாஸ் அவசியம்


*நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ- பாஸ் பெற்று பயணிக்க வேண்டும்.
* கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுபபுவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
*தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியன விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
* பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
06-ஜூன்-202110:27:22 IST Report Abuse
சோணகிரி விடியல் வரும் என்று சொன்னார்கள்... தமிழகம் இருள் சூழ்ந்து கிடக்கிறது....
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
06-ஜூன்-202108:33:54 IST Report Abuse
NoBs சுய கட்டுப்பாடு இல்லாத மக்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. குடியாட்சியில் இந்த மாதிரிக் கட்டுப்பாடுகள் அவசியமென்ற நிலை திரும்ப திரும்ப வருமெனில் அம்மக்கள் குடியாட்சிக்கான தகுதியற்றவர்கள் என்பதே உண்மை. அதை மறுத்து விதண்டாவாதம் செய்வது பகுத்தறிவு இல்லை, பேதமை மக்கள் பிரதிநிதிகள் மன்னர்கள் போல் நடந்து கொள்வதும் மக்கள் மதியின்றி சுயக்கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதும் வரும் காலங்களில் மிக மிகக்கடினங்களை சந்திக்கப் போகிறோம் என்று உணர்த்துகிறது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-ஜூன்-202122:53:01 IST Report Abuse
அசோக்ராஜ் நான் நினைக்கேன். அரசை ரிமோட்டில் இயக்குற எல்லார் கிட்டேயும் துண்டு சீட்டுகள் வாங்கி, குலுக்கல் முறையில் நாலைஞ்சு எடுத்து அனவுன்ஸ் செய்வாராக்கும். எந்த லாஜிக்குலேயும் அடங்க மாட்டேங்குதே. சலூன் அண்ட் டீக்கடை சங்கங்கள் நாளைக்கே போய் வெய்ட்டா கவனிச்சுடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X