அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பேச்சை அதிகாரிகள் கேட்பதில்லை: ஜெயகுமார்

Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை:''முதல்வர் பேச்சை மக்களும் கேட்பதில்லை; அதிகாரிகளும் கேட்பதில்லை. அதன் விளைவாகவே, கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.காயிதே மில்லத், 126வது பிறந்த நாளையொட்டி, சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர்கள்
 முதல்வர் பேச்சை அதிகாரிகள் கேட்பதில்லை: ஜெயகுமார்

சென்னை:''முதல்வர் பேச்சை மக்களும் கேட்பதில்லை; அதிகாரிகளும் கேட்பதில்லை. அதன் விளைவாகவே, கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

காயிதே மில்லத், 126வது பிறந்த நாளையொட்டி, சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கோகுலஇந்திரா, வளர்மதி ஆகியோர், மலர் போர்வை போர்த்தி, மரியாதை செலுத்தினர்.


இறப்பு அதிகம்

அதன்பின் ஜெயகுமார் அளித்த பேட்டி:அ.தி.மு.க., எழுச்சியோடு உள்ளது. பன்னீர்செல்வம்., -- பழனிசாமி., இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இருவரும் இயல்பாக சந்திக்கின்றனர்; ஆச்சரியப்பட ஏதுமில்லை.நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது, கொரோனா தொற்றால், உச்சகட்டமாக, 7,000 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, 25 ஆயிரமாக உள்ளது; இறப்பு அதிகமாக உள்ளது.

கோவை மண்டலத்தில், ஓராண்டில், 400 பேர் இறந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், ஒரு மாதத்தில், 745 பேர் இறந்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது; அவர் நல்ல அதிகாரி. அமைச்சர்கள் சரியாக செய்யாததால், அதிகாரிகள் குழு நியமிக்கப்படுகிறது.


மைக்ரோ லெவல்

ஆட்சியாளர்கள் அதிகாரிகளை நம்புகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், அடிக்கடி ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. வீடு வீடாக சென்று, மக்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.'மைக்ரோ லெவல்' என்ற வகையில் பணி செய் தோம். அதை தி.மு.க., ஆட்சியில் செய்யாததால், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக ஊரடங்கு போட்டனர்; முழுமையான ஊரடங்காக இல்லை.முதல்வர் பேச்சை மக்களும் கேட்கவில்லை; அதிகாரிகளும் கேட்பதில்லை. அதன் விளைவால் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-ஜூன்-202105:35:39 IST Report Abuse
meenakshisundaram அது சரி ,அவர் பேச்சை வீட்டிலேயாவது யாரும் கேட்கிறார்களா?
Rate this:
Cancel
karikalan - chennai,இந்தியா
09-ஜூன்-202101:00:40 IST Report Abuse
karikalan நீயெல்லாம் பேச வந்திட்டியாக்கும் ... உங்க ஆட்சியில தானே கோவிடை ஏத்தி விட்டீங்க.
Rate this:
Cancel
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
08-ஜூன்-202116:40:08 IST Report Abuse
Selvam Palanisamy எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல்வர் இல்லை. அதனால் அதிகாரிகள் யாரும் அவர் பேச்சை கேட்பதில்லை. உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுங்கள் ஜெயக்குமார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X