திரிணமுல் பொதுச் செயலராக அபிஷேக் பானர்ஜி நியமனம்

Added : ஜூன் 05, 2021
Share
Advertisement
கோல்கட்டா:திரிணமுல் காங்., கட்சியின் பொதுச் செயலராக தன் உறவினர் அபிஷேக் பானர்ஜியை, கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., அபார வெற்றி பெற்றது. கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அமைப்புக்குழு

கோல்கட்டா:திரிணமுல் காங்., கட்சியின் பொதுச் செயலராக தன் உறவினர் அபிஷேக் பானர்ஜியை, கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., அபார வெற்றி பெற்றது. கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அமைப்புக்குழு கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகளை மம்தா பானர்ஜி மாற்றிஅமைத்தார்.

கட்சியின் அகில இந்திய பொதுச் செயலராக, தன் உறவினரும், எம்.பி., யுமான அபிஷேக் பானர்ஜியை நியமித்தார். கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அமல்படுத்தப் பட்டுள்ளதால், இதுவரை தான் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து அபிஷேக் பானர்ஜி விலகினார். இதையடுத்து, கட்சியின் இளைஞர் அணி தலைவராக, நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டார்.

கலாசார பிரிவு தலைவராக திரைப்பட இயக்குனர் ராஜ் சக்கர வர்த்தி, மாநில பொதுச் செயலராக குணால் கோஷ், விவசாய அணி தலைவராக புர்னேந்து போஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X