எக்ஸ்குளுசிவ் செய்தி

மிரட்டப் போகும் கொரோனா: மூன்றாம் அலைக்கு தமிழகம் தயாரா?

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
இந்தியாவில், 2020 மார்ச் முதல், 2021 ஜனவரி வரை கொரோனா முதல் அலை நீடித்தது. இந்த அலையில், 1.07 கோடி பேர் சிக்கினர். பலி, 1.54 லட்சம். பிப்., 2021ல் துவங்கிய, 2ம் அலை, மரபணு மாறிய வைரஸ்களுடன், புதிய ரூபத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை, 1.75 கோடி பேர் பாதிப்புக்கு ஆளாகி, 1.86 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த, 2ம் அலையில், தமிழகத்திற்கு அதிக சேதாரம் ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, 25 முதல், 45 வயதினர்
கொரோனா மூன்றாம் அலை, தமிழகம் தயாரா?

இந்தியாவில், 2020 மார்ச் முதல், 2021 ஜனவரி வரை கொரோனா முதல் அலை நீடித்தது. இந்த அலையில், 1.07 கோடி பேர் சிக்கினர். பலி, 1.54 லட்சம். பிப்., 2021ல் துவங்கிய, 2ம் அலை, மரபணு மாறிய வைரஸ்களுடன், புதிய ரூபத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை, 1.75 கோடி பேர் பாதிப்புக்கு ஆளாகி, 1.86 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்த, 2ம் அலையில், தமிழகத்திற்கு அதிக சேதாரம் ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, 25 முதல், 45 வயதினர் ஏராளமானோர் மாண்டுள்ளனர். இன்னொரு புறம், 3ம் அலை குறித்த பேச்சும் அடிபட துவங்கி விட்டது. சமீபத்தில் வெளியான எஸ்.பி.ஐ., வங்கி வல்லுநர்களின் ஆய்வு, மூன்றாம் அலையின் தீவிரம் மிக கடுமையாக இருக்கும் என, எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

அதன் விவரம்:

* கொரோனா, 2ம் அலையில் இதுவரை, 1.69 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; ௩ம் அலையில், இந்த எண்ணிக்கை, 2 கோடியாக உயரும்

* அவர்களில், 80 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்படுவர்; அதாவது, 1.6 கோடி பேர்

* எஞ்சிய, 20 சதவீதம் பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும். அது, 40 லட்சம் பேர். இதில், 2 லட்சம் பேருக்கு அதிதீவிர சிகிச்சை தேவைப்படும்

* 2ம் அலையில் இதுவரை, 1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 3ம் அலையின் போது பலி எண்ணிக்கை, 40 ஆயிரமாக இருக்கும். இறப்பு விகிதம், 0.2 சதவீதமாக குறையும்

* அதே வேளையில், தீவிர தொற்றுக்கு ஆளானோரில் தான் அதிக பலி நேரும். 2ம் அலையில் தீவிர தொற்றுக்கு ஆளான, 25 சதவீதம் பேர் பலியாகி விடுகின்றனர்; 3ம் அலையில் இந்த விகிதம், 20 சதவீதமாக இருக்கும்.

* தீவிர தொற்றுக்கு ஆளாவோர் விகிதம், 20 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறையும்.

* 3ம் அலை, 98 நாட்கள் நீடிக்கும்.

அதேநேரத்தில், '2ம் அலையை காட்டிலும் 3ம் அலை தீவிரமாகவே இருக்கும். அதே வேளையில், ஆக்சிஜன், ஐ.சி.யூ., படுக்கைகளுடன் கூடிய, தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் விகிதம் குறைவதால், இறப்பு விகிதமும் கணிசமாக குறையலாம்.

தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் விகிதம், 20ல் இருந்து, 5 சதவீதமாகலாம். இறப்பு எண்ணிக்கை, 1.7 லட்சத்தில் இருந்து, 40 ஆயிரமாக குறையும். மரபணு மாறிய புதிய வைரஸ் தான், 3ம் அலைக்கு வித்திடும். எனவே இதன் தாக்கம் தீவிரமாக, புதுமையாக இருக்கலாம். குறிப்பாக, முதல் அலையில் முதியவர்கள், 2ம் அலையில் இளம் வயதினர், 3ம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்றும், சில ஆய்வுகள் கூறுகின்றன. இதையெல்லாம் எதிர்கொள்ள, தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட வேண்டும்.ஆய்வறிக்கை அடிப்படையில், தமிழக அரசு இப்போதே மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். போதிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் கூடுதல் ஒதுக்கீடுகளை பெற முன்வர வேண்டும்.

தடுப்பூசி பணியில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகம் பின்தங்கி நிற்கிறது. இதே நிலை தொடர்ந்தால், 3ம் அலையில் இன்னும் பல ஆயிரம் பேரை நாம் காவு கொடுக்க வேண்டி வரும். எனவே, தமிழக அரசு விழிக்க வேண்டும்.


latest tamil news

முன்னேற்பாடு என்ன?இதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்து, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:

* தினசரி செலுத்தும் தடுப்பூசி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்

* பெரிய மருத்துவமனைகளில், தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தி, கிராமம் கிராமமாக சென்று முகாம் அமைக்க வேண்டும். நகரங்களில் வார்டு, வார்டாக இப்பணியை மேற்கொள்ளலாம். இது தவிர, அங்கன்வாடி, பள்ளிகளில் முகாம் நடத்தலாம். இதனால், கூடுதல் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடியும். தடுப்பூசி வீணாவதையும் பெருமளவு தடுக்கலாம்

* நான் பணியில் இருந்த, 2017ல் ஒன்பது மாதம் முதல், 15 வயதான குழந்தைகளுக்கு, ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. ஒரே மாதத்தில், 1.5 கோடி பேருக்கு இத்தடுப்பூசியை செலுத்தினோம். சிறப்பான திட்டமிடல் இருந்தால், மாதம்தோறும், 1.5 முதல், 2 கோடி கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்

* தடுப்பூசி செலுத்துவதில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர், குடியிருப்புகளில் துப்புரவு பணி மேற்கொள்வோர், பாலுாட்டும் தாய்மார்கள், கருவுற்ற பெண்ணை கவனிப்போருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

* ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் போது, தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடலாம்

* 3ம் அலையை சமாளிக்கும் வகையில் பெரிய, பெரிய தனியார் மருத்துவமனைகளும், திரவ ஆக்ஸிஜன் டேங்குகளை நிறுவி சப்ளை செய்ய முன்வர வேண்டும்

* இப்போதும், ஊரடங்கு தளர்வுக்கு பிறகும், மருத்துவமனைகளில் கொரோனா வார்டை மற்ற வார்டுகளில் இருந்து தனியாக வைக்க வேண்டும். சிறிய பிரச்னைகளுக்கு மருத்துவமனை செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


சர்வதேச டெண்டர் என்னாச்சுதமிழக அரசு, 3.5 கோடி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்வதற்காக, சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுத்தது.மே, 15 முதல் தடுப்பூசி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.ஒப்பந்தம் கிடைக்க பெறும் நிறுவனம், 3.5 கோடி தடுப்பூசி டோஸ்களை, 180 நாட்களுக்குள் முழுமையாக வழங்க வேண்டும். அரசின் இந்த தடாலடி நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது.ஆனால், இதுவரை எந்த நிறுவனமும் தடுப்பூசி வழங்க முன்வந்ததாக தகவல் இல்லை. டெண்டர் குறித்து அரசு மவுனம் காக்கிறது. இன்னொரு புறம், இந்த டெண்டர் விதிமுறைகளை படித்தால், நமக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பது தெரியும். ஏனென்றால், அத்தனை சவால்கள் அதில் உள்ளன.
அவை..


* உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்த, தடுப்பூசி நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் ஒப்பந்தம் பெற முடியும். இக்கட்டான நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி பெறாவிட்டாலும், உலக சுகாதார அமைப்பின் அனுமதி இருந்தால் போதும் என, தமிழக அரசின் டெண்டர் விதிமுறை சொல்கிறது
* அப்படியென்றால் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு மட்டுமே, இந்தியாவில் அனுமதி கிடைத்துள்ளது. இதில், கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகியவற்றுக்கு, உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை. ஸ்புட்னிக் வி அனுமதிக்காக காத்திருக்கிறது.


எனவே, இவற்றை கொள்முதல் செய்ய இயலாது. இன்னொரு புறம் ஏற்கனவே, 1.5 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு மாநில அரசு ஆர்டர் செய்துள்ளது. ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. எனவே மேலும், 3.5 கோடி டோஸ் கோருவது என்பது சிக்கலான காரியம்


* ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலையும் அதிகம். ஒரு டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து, வாங்கும் இடத்தில்,995.40 ரூபாய். அதேநேரத்தில், கோவிஷீல்டு ஒரு டோஸ், 300 ரூபாய்க்கு கிடைத்து விடும். 3.5 கோடி டோஸ் வாங்க வேண்டுமானால், 3400 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.-நமது நிருபர்-


Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202112:45:30 IST Report Abuse
oce மார்ச் 2019 முதல் மார்ச் 2020 வரை வூகானில். குரோனாவால் இறந்தவர் எத்தனை பேர்.அந்த காலகட்டத்தில் வூகானுக்குள் நுழைந்தவர்கள் எத்தனை பேர். அங்கிருந்து பரவலாக வெளியேறியவர் எத்தனை பேர். அப்படி வெளியேறியவர்கள் முதலில் யாரிடத்தில் எந்த வழியாக சென்று தங்கினார்கள். தங்கிய இடத்தவர்களில் எத்தனை பேர் வைரஸால் தாக்கப்பட்டனர். வைரஸை கொடுத்தவர் வாங்கியவர் இரு தரப்பினரும் அப்புறம் என்னவானார்கள். எங்கெங்கு போய் அதை பரப்பினார்கள். இந்த பரவல் தொடர் சங்கிலியை கண்டு பிடிக்காத வரை சீனன் வைரஸை பரப்பியபடியே இருப்பான்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202112:27:52 IST Report Abuse
oce கடந்த 2019 மார்ச்சில் வவ்வால்களை கொன்று பெரிய மிக்சியில் போட்டு கூழாக்கி கண்ணாடி குடுவைகளில் சேமித்து ஆறுமாதம் கழித்து அதில் தோன்றிய வைரஸ்களை பாட்டில்களில் இறக்கி வைத்து மார்ச் 2020ல் பாட்டில்களில் வீரிய சக்தி முற்றிய வைரஸ்களை திறந்து விட்டுள்ளனர். வைரஸ்களின் வீரிய சக்தியை அளந்து அவ்வப்போது திறந்து விடுவதால் அவைகளின் வீரியம். அவை பரவலில் எதிரொலிக்கிறது
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
07-ஜூன்-202114:37:31 IST Report Abuse
raghavan சமுதாய அக்கறை இல்லாமல் பலர் திரிகின்றனர். வீட்டருகே உள்ள ஒரு ரேஷன் கடை ஊழியர் இதுவரை ஒரு நாள் கூட முககவசம் அணிந்ததில்லை. பேருக்கு ஒரு துணியை வைத்து முகத்தை கூட மூடியதில்லை. அவரால் அவரை அறியாமலே எத்தனை பேரைக் கொன்றாரோ எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்ததோ? இந்த மாதிரி ஆட்களை என்ன செய்யலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X