நான் பணக்காரி இல்லை: ஸ்ருதி ஹாசன் பளிச்| Dinamalar

நான் பணக்காரி இல்லை: ஸ்ருதி ஹாசன் பளிச்

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (3)
Share
‛தந்தை எட்டடி பாய்ந்தால் மகள் நான் 16 அடி பாய்வேன்' என நடிப்பு, நடனம், இசை, பாட்டு என பல துறைகளில் களமிறங்கி சகலகலா வல்லியாக வரும் வரும் ஸ்ருதிஹாசனிடம் கொரோனா ஊரடங்கில் ஒரு பளீச் பேட்டி... கொரோனா ஊரடங்களில் எப்படி நேரத்தை செலவிடுறிங்க சமையல் செய்ய, முன்பை விட வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள கற்றேன். கொரோனா நமக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. வெளியே போக
ஸ்ருதிஹாசன்,Shruthi haasan

‛தந்தை எட்டடி பாய்ந்தால் மகள் நான் 16 அடி பாய்வேன்' என நடிப்பு, நடனம், இசை, பாட்டு என பல துறைகளில் களமிறங்கி சகலகலா வல்லியாக வரும் வரும் ஸ்ருதிஹாசனிடம் கொரோனா ஊரடங்கில் ஒரு பளீச் பேட்டி...


கொரோனா ஊரடங்களில் எப்படி நேரத்தை செலவிடுறிங்க


சமையல் செய்ய, முன்பை விட வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள கற்றேன். கொரோனா நமக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. வெளியே போக முடியாததால் வீட்டில் இருந்து கொண்டே எதற்கு, எப்படி நேரம் செலவிடலாம் என தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு


நல்லா தமிழ் பேசும் நீங்கள் தமிழில் அதிகம் நடிப்பதில்லை ஏன்

ஒன்றரை ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்தேன்.'லாபம்' படம் 3 ஆண்டுகளாக போகுது. ஒரு படம் நடித்தால் அது பேசப்படும் அளவு இருக்கணும். பிற மொழிகளிலும் நடிப்பதால் பேலன்ஸ் செய்ய வேண்டி இருக்கு. இனி கண்டிப்பா தமிழில் கவனம் செலுத்துவேன்.


பிரபாஸுடன் நடிக்கும் 'சலார்' படம் பற்றி சொல்லுங்களேன்

சிறு பகுதி தான் ஷூட்டிங் போயிருக்கு. பிரபாஸ் பொருத்தவரை ரொம்ப எளிமையாக பழக கூடியவர். நிறைய எனர்ஜி அவர்கிட்ட இருக்கு.


இ.எம்.ஐ., கட்டணும்னு சொல்லி இருக்கீங்களே உங்களுக்கு என்ன கஷ்டம்

ஏன் கஷ்டம் இருக்கக் கூடாதா... நடிகையா இருந்தா இ .எம். ஐ., இருக்காதா என்ன. உதாரணத்துக்கு ஒரு வீடு, கார் வாங்குவதா இருந்தால் கடன் வாங்க வேண்டி இருக்கும். எங்களுக்கும் பிரச்னைகள் இருக்கு.நான் பெரிய பணக்காரி இல்லை.இதை சொல்ல ஆச்சரியம், அசிங்கப்பட ஒன்றுமில்லை என நினைக்கிறேன்


சுயமாக சம்பாதித்து, தனித்து வாழும் பெண்களுக்கான சவால்கள்

சவால்கள் பலருக்கு பல வகையில் இருக்கு, நான் பிறந்த வீடு, ஊர், குடும்பம், சூழல் ஒப்பிட்டால் நான் ரொம்ப லக்கியா நினைக்கிறேன், பெண்களுக்கான அடிப்படை கல்வி, பாதுகாப்பு நிறைய இடத்தில் இல்ல. இதுவும் ஒரு வகை பிரச்னைதான். கிடைத்த சுதந்திரத்தைவைத்து சமூகத்தில் எதை செய்யலாம், கூடாதுங்குற பொறுப்பை உணர்ந்து பெண்கள் நடக்க வேண்டும்.


யாருடைய இயக்கத்தில் நடிக்கணும் என லிஸ்ட் எதும் இருக்காபெரிய லிஸ்ட் இருக்கு...புதுமுகமாக இருக்கலாம், அல்லது பழைய இயக்குனராக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல இயக்குனர் படத்தில் நான் நடிக்கணும் அவ்வளவு தான்.


எதிர்காலத்தில் அப்பா கமல் போல் அரசியலில் ஆர்வம் வருமா

அரசியல் ஆர்வம் எல்லாம் எனக்கு வராதுன்னு தான் நினைக்கிறேன்.


அப்பா அம்மாவிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன

அப்பாவிடம் எதற்கும் பயம் இல்லாமை பற்றியும், அம்மாவிடம் எல்லார்கிட்டயும் ஈசியா தொடர்பில் இருப்பது பற்றியும் கற்றேன். எப்போதும் அவர்கள் நீ எங்கே இருக்கீங்க, என்ன சாப்பிட்ட என கேட்பது எனக்கு பிடிக்கும்.குடும்பம் மட்டுமின்றி வெளி உலகிலும் அம்மா அப்படி தான் பழகுவாங்க.


உங்களது அடுத்தடுத்த படங்கள் என்ன


ஒரு ஹிந்தி சீரியல், பிரபாஸுடன் 'சலார்' நடிக்கிறேன். விஜய் சேதுபதியுடன் நடித்த 'லாபம்' விரைவில் வெளிவரும். அடுத்து நிறைய படங்கள் நடிப்பது குறித்து யோசிக்கணும்.


-கவி


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X