சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : இதில் பிற்போக்குத்தனம் ஏதுமில்லை!

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வழக்கறிஞர், கே.பத்மபிரியா,- சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்கள், வெளி உலகுக்கு தெரிந்தவை சில; தெரியாதவை பல. முன்பெல்லாம் மாணவ - மாணவியருக்கு தனித்தனி பள்ளிகள் இருந்தன. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்களும்; மகளிர் பள்ளியில், பெண் ஆசிரியைகளும்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வழக்கறிஞர், கே.பத்மபிரியா,- சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்கள், வெளி உலகுக்கு தெரிந்தவை சில; தெரியாதவை பல. முன்பெல்லாம் மாணவ - மாணவியருக்கு தனித்தனி பள்ளிகள் இருந்தன. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்களும்; மகளிர் பள்ளியில், பெண் ஆசிரியைகளும் பயிற்றுவித்தனர். அப்போதெல்லாம், பாலியல் தொந்தரவு என்ற பிரச்னை ஏற்பட்டதே இல்லை. மாதா, பிதாவிற்கு அடுத்த இடத்தில் குரு இருந்தார். ஆசிரியர் மீது மரியாதை இருந்தது. நம் கலாசாரம் காக்கப்பட்டது. 'நாகரிகம்' என்ற போர்வையில், இரு பாலரும் சேர்ந்து படிக்கும் வகையில், ஆங்கில முறை பள்ளிக் கல்வி உருவாக்கப்பட்டது.latest tamil newsஇதற்கு இடையில், பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் வேலையை, திரைப்படங்கள் செய்தன. பள்ளியில் மாணவர்கள் காதலிப்பது போலவும், ஆசிரியர் - மாணவி உறவை கொச்சைப்படுத்தியும் காட்சிகள் காட்டப்பட்டன. மேலும் மொபைல் போன், தன் பங்கிற்கு வக்கிர எண்ணத்தை, இளம் மனதில் துாண்டிவிட்டது. மாணவியரிடம் அத்துமீறல் செய்த ஆசிரியரை மன்னிக்கவே கூடாது.


latest tamil newsஇன்னும் எத்தனை பள்ளிகளில், இப்படி நடந்தனவோ, நடக்கின்றனவோ? மாணவ - மாணவியருக்கு தனித்தனி பள்ளிகள் அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களும்; மகளிர் பள்ளிக்கு, ஆசிரியைகளும் நியமிக்கப்பட வேண்டும். இதில் பிற்போக்குத்தனம் ஏதுமில்லை. இதனால், பெண் பிள்ளைகளின் பெற்றோர், நிம்மதி பெரு மூச்சு விடுவர்.


Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
06-ஜூன்-202122:59:15 IST Report Abuse
Sekar KR Remove the internal marks from the School, most of the problem will be solved.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
06-ஜூன்-202121:12:51 IST Report Abuse
mathimandhiri தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நிலைக்கு நாம் இப்போது ஒவ்வொரு விஷயத்திலும் தள்ளப் பட்டிருப்பது மிகப் பெரிய சோகம். ஐந்தாம் வகுப்பு வரையிலும் மட்டும் தான் " கோ எஜூகேஷன்" எனப்படும்இரு பாலரும் பயிலும் முறை இருந்தது.// இது போன்ற சீர்கேடுகள் இல்லை.// ஆனால் சமீப காலம் வரை ஆண்கள் கல்லூரிகளாகவே ர்டியாக் மேற்பட்ட கல்லூரிகளில் எல்லாம் இப்போது பெண்களும் படிக்க அனுமதிக்கப் பட்டது எந்த அடிப்படையில் என்று தெரிய வில்லை. மகளிர் கல்லூரி , மகளிர் உயர்நிலைப் பள்ளிகள் தனியாகத் தான் இயங்கி வந்தன. ஆனால் இன்று இரு பாலரும் நேரடியாகவே ஒருவர்க்கொருவர் பழகும் விதத்தில் எல்லாக் கல்வி நிறுவனங்களும் பொதுவாகப் போய் விட்ட நிலையில், ஊடகங்கள் கேடு கேட்ட திரைப் படங்கள் இவற்றால் படிக்கும் பெண்களின் வாழ்க்கை பாழாவது தொடர் கதையாகி வருகிறது.//கல்வி நிறுவனங்களின் பேராசை, ஆசிரியர்களின் அரசியல் பின் புலம் , துறை ஊழல் இவையே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ///சினிமாவை தடை செய்ய வேண்டும்//இவற்றில் தாராளமாக சீனாவை பின் பற்றலாம்.
Rate this:
Cancel
V.Ramesh kumar - RAJAPALAYAM,இந்தியா
06-ஜூன்-202120:54:12 IST Report Abuse
V.Ramesh kumar விசாரணை, சட்டம் & நீதி தண்டனை, ஜாமீன்அனைவருக்கும் விரைவாகவும் சமமாகவும் இருந்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் சரியாகிவிடும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X