சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. ஊரடங்கிலும் 'ரேக்ளா ரேஸ்' தஞ்சை அருகே மூவர் கைதுதஞ்சாவூர்: ஊரடங்கு விதியை மீறி, ரேக்ளா வண்டி பந்தயம் நடத்திய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்த இளங்காடு மெயின் ரோட்டில், ரேக்ளா வண்டி பந்தயம் நேற்று நடந்தது. போட்டியில், ஏராளமான இளைஞர்கள், பைக்குகளில் சத்தம் போட்டபடி உற்சாகமாக செல்லும் வீடியோ காட்சிகள்,

தமிழக நிகழ்வுகள்
1. ஊரடங்கிலும் 'ரேக்ளா ரேஸ்' தஞ்சை அருகே மூவர் கைது
தஞ்சாவூர்: ஊரடங்கு விதியை மீறி, ரேக்ளா வண்டி பந்தயம் நடத்திய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்த இளங்காடு மெயின் ரோட்டில், ரேக்ளா வண்டி பந்தயம் நேற்று நடந்தது. போட்டியில், ஏராளமான இளைஞர்கள், பைக்குகளில் சத்தம் போட்டபடி உற்சாகமாக செல்லும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. நேமம் வி.ஏ.ஓ., அருண்குமார், திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேக்ளா வண்டி போட்டியில் ஈடுபட்ட , 39 - 47 வயதுள்ள மூவரை போலீசார் கைது செய்தனர். 'ரேஸு'க்கு பயன்படுத்திய நான்கு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.latest tamil news2. கொரோனா விதிமீறல் ரூ.1.03 கோடி அபராதம் ; 1754 பேர் மீது வழக்கு
சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறி முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, ரோட்டில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் என பல்வேறு துறையினர் சார்பில் மார்ச் 17 முதல் ஜூன் 4ம்தேதி வரை ரூ.1 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரத்து 460 வரை அபராதம் வசூலித்துள்ளனர். இது தவிர வாகனங்களில் சுற்றித்திரிந்ததாக 1754 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அபராதம் ரூ.1.03 கோடி துறைகள் ரூ.(லட்சத்தில்) சுகாதாரத்துறை 1,92,500 போலீஸ் 68,93,000 வருவாய் 19,48,560 ஊராட்சிகள் 2,40,600 பேரூராட்சிகள் 3,06,100 நகராட்சிகள் 7,38,700.


latest tamil news3. திருப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் மில்லுக்கு சீல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜனுக்கு (அ.தி.மு.க.) சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மில் நெய்க்காரன்பாளையத்தில் உள்ளது. அதில் 280 பேர் வேலை செய்கின்றனர்.

கடந்த இரு வாரத்துக்கு முன் 15 தொழிலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மூன்று நாட்களுக்கு முன் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இது தொடர்பாக வருவாய் துறையினர் ஆய்வு செய்து ஊரடங்கை மீறி ரகசியமாக இயங்கி 27 தொழிலாளருக்கு தொற்று பாதிக்க காரணமாக இருந்த மில்லுக்கு 'சீல்' வைத்தனர்.


latest tamil news


Advertisement


4. வீட்டில் சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் வீட்டில் சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீசார் கைது செய்து, அதற்குரிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.


latest tamil newsமுழுஊரடங்கால் மதுபானகடைகள் மூடப்பட்டுஉள்ளன. இந்நிலைமையில் சிலர் வீடு, தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பதாக புகார் வந்தது. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, தனிபிரிவு போலீஸ் குமாரசாமி, கழுவூரணியில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக இன்பராஜ் 60, சங்கர் 55, கார்த்திக் 29, விஜய் 28, ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து குக்கர், பிளாஸ்டிக் டிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

5. போதை ஊசியால் வந்தது வினை: அரிவாளால் வெட்டி கொலை
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியிலிருந்து போடிபாளையம் செல்லும் வழியில், மகாலட்சுமி கோவில் உள்ளது. நேற்று காலை இதனருகே உள்ள ஓடையில், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சடலத்தின் பின் கழுத்து வெட்டப்பட்டு, முகம் மற்றும் மார்பு பகுதிகளில், வெட்டு காயங்கள் இருப்பது தெரிந்தது. அருகே ஊசி ஒன்றும் காணப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர், போடிபாளையம், போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜீவானந்தம், 22 என்பதும், நேற்று முன்தினம் இரவு, மற்றொரு கூலி தொழிலாளியுடன், சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததும் தெரியவந்தது. 18 வயதான அச்சிறுவனை, போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது:நேற்று முன்தினம் இரவு இருவரும், குனியமுத்தூர் பகுதிக்கு சென்று போதை ஊசி வாங்கி வந்துள்ளனர். கோவில் மண்டபம் கழிவறை முன் ஜீவானந்தத்திற்கு, சிறுவன் ஊசி போட்டுள்ளார்.


latest tamil newsபோதை ஏறாததால், மேலும் ஊசி வாங்கி வருமாறு, ஜீவானந்தம் கூறியுள்ளார். பணம் இல்லை என சிறுவன் கூறியதற்கு, மொபைல்போனை விற்று வாங்கி வருமாறும், இல்லையெனில் கொன்று விடுவேன் எனவும், ஜீவானந்தம் மிரட்டியுள்ளார்.ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து, ஜீவானந்தத்தை வெட்டி, கொலை செய்துள்ளான். பின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால், ஓடையருகே சடலத்தை போட்டு, பச்சை நிற வலையால் மூடி விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். போலீசில் சிக்காமல் இருக்க, வெளியூருக்கு செல்ல, ஆயத்தமாகும்போது பிடிபட்டார்.தந்தை போல் மகன்!கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், தற்போது ஜீவானந்தம் கொலையுண்டு கிடந்த அதே இடத்தில், அவரது தந்தை சிவக்குமார் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையும், கஞ்சா போதைக்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் குற்றம் :
'டிவி' நடிகர் கைது
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் பிரபல, 'டிவி சீரியல்' நடிகர் பேர்ல் பூரி, ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, அவரை கைது செய்தனர். இவர், 'நாகினி 3' மற்றும் 'பேபனா பியார்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.


latest tamil newsஉலக நடப்பு
ஆப்ரிக்க நாட்டில் 100 பேர் படுகொலை
நியாமே : மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 100 பேர் கொல்லப்பட்டனர்.


latest tamil newsபுர்கினோ பாசோவின் யாகா மாகாணத்தில் உள்ள சோல்ஹான் கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.அங்கிருந்த பல வீடுகளுக்கு அவர்கள் தீ வைத்தனர். உள்ளூர் சந்தை முற்றிலும் சேதமடைந்தது. பயங்கர வாதிகளின் இந்த கொடூரமான தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X