சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
அகர்தலா : திரிபுராவில், குடும்பத்தின் ஏழ்மை நிலை குறித்து கூறிய சிறுமியின் கோரிக்கையை, முதல்வர் பிப்லப் குமார் தேவ், உடனடியாக நிறைவேற்றி வைத்து உள்ளார்.வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 'பேஸ்புக்' சமூக வலைதளம் வாயிலாக சிறுமியின் நிலை அறிந்து, அவரது தேவைகளை, முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ் உடனடியாக நிறைவேற்றியது, அவர்களை மகிழ்ச்சியில்

அகர்தலா : திரிபுராவில், குடும்பத்தின் ஏழ்மை நிலை குறித்து கூறிய சிறுமியின் கோரிக்கையை, முதல்வர் பிப்லப் குமார் தேவ், உடனடியாக நிறைவேற்றி வைத்து உள்ளார்.



latest tamil news



வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 'பேஸ்புக்' சமூக வலைதளம் வாயிலாக சிறுமியின் நிலை அறிந்து, அவரது தேவைகளை, முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ் உடனடியாக நிறைவேற்றியது, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அகர்தலாவின் புறநகர் பகுதியைச் சேர்ந்த உத்தம் தாஸ் மகள் பர்ஷா, 14, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளார்.சமீபத்தில், அவரது குடும்பம் ஒற்றை அறை வீட்டில் வசிப்பதாகவும், படிப்பதற்கான மேசை இல்லாதது சிரமமாக இருப்பதாகவும், பேஸ்புக் சமூக வலைதளத்தில் கூறி இருந்தார். அதற்கு முன், அவரது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருந்தார். இவற்றை பார்த்த முதல்வர், சிறுமிக்கு உதவும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


latest tamil news



உடனடியாக படிக்கும் மேசை, மருந்துகள், மளிகை மற்றும் உணவு பொருட்கள், சிறுமியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்தன. இதுபற்றி பர்ஷா கூறும்போது, ''என் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாமல், குடும்பம் வறுமையில் தவிக்கும் நிலையில், முதல்வரின் உதவி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
06-ஜூன்-202119:02:28 IST Report Abuse
Nagarajan D ஒரு சிறுமி கோரிக்கை விடுத்தார், நிறைவேற்றினீர்கள் வாழ்த்துக்கள்... நம் நாட்டில் ஏகப்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் சொல்ல முடியாத துயரத்தில் தான் இருக்கிறார்கள்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஜூன்-202117:16:31 IST Report Abuse
J.V. Iyer தமிழ்நாட்டில் திமுககாரர்களின் மகளாக இருந்தால்தான் உதவி கிடைக்கும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஜூன்-202115:52:21 IST Report Abuse
Vena Suna பல குழந்தைகள் இருக்கின்றனவே...எல்லோர்க்கும் உதவ வேண்டும்...இங்கு ஜாதிக்கு ஏற்றார் போல் உதவுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X