பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பராமரிப்பு தகவல் இணையதளம் துவக்கி வைப்பு

Added : ஜூன் 06, 2021
Share
Advertisement
கடலுார்-கொரோனா பராமரிப்பு தகவல் இணைய தளத்தை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.கடலுார் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா பராமரிப்பு தகவல் இணைய தளத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான படுக்கை

கடலுார்-கொரோனா பராமரிப்பு தகவல் இணைய தளத்தை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.கடலுார் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா பராமரிப்பு தகவல் இணைய தளத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் விவரம், தடுப்பூசி குறித்தான விவரங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள http//covidcarecuddalore.inஎன்ற இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.சிப்காட் தொழில் நிறுவனங்களின் சார்பில் 113 ஆக்சிஜன் செறியூட்டிகளையும், 10 டி டைப் ஆக்சிஜன் சிலிண்டர்களையும், கலெக்டர்பாலசுப்ரமணியம் தலைமையில் அமைச்சர் பன்னீர்செல்வம், அரசு மருத்துவமனைக்கு அளித்திட இணை இயக்குரிடம் வழங்கினார். இந்த ஆய்வின்போது எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், திட்ட இயக்குனர்( ஊரக வளர்ச்சி) மகேந்திரன், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்ரவன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X