பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி 'டிமாண்ட்' பொது மக்கள் ஏமாற்றம்

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார்-கொரோனா தடுப்பூசி டிமாண்ட் காரணமாக கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று தடுப்பூசி போடாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஜன., 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில்
 கொரோனா தடுப்பூசி 'டிமாண்ட்' பொது மக்கள் ஏமாற்றம்

கடலுார்-கொரோனா தடுப்பூசி டிமாண்ட் காரணமாக கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று தடுப்பூசி போடாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கடலுார் மாவட்டத்தில் கடந்த ஜன., 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.இந்நிலையில், மாவட்டத்திற்கு போதிய தடுப்பூசிகளை, அரசு ஒதுக்காததால், தடுப்பூசி போடும் பணி தடைபட்டு வருகிறது.நேற்று காலை மாவட்டத்தில் 840 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருந்தது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் கடலுார் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்காததால் பணிபாதிக்கப்பட்டது.இதனால், பொதுமக்கள், நேற்று காலையில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட சென்றனர்.மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை. அடுத்து வந்தால் மட்டுமேஅனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறினர்.இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன்திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202122:19:48 IST Report Abuse
oce மரணமடைந்தவரிடமிருந்து அதிகமாக வளர்ந்த வைரஸ் தொற்றுக்கள் அவரை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி அடுத்த தொற்றுக்கு ஆட்களை தேடுகின்றன. இதை அலை என்கிறோம்.குரோனா மரணங்கள் தொடரும் வரை அதன் அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X