சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கில் சுற்றித்திரிந்த 5,326 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஞ்சிபுரம்-ஊரடங்கில் சுற்றியவர்களிடம் இருந்து போலீசார், 5,326 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும், மாவட்ட காவல் துறை மேற்கொண்டுள்ளது.எனினும், அத்தியாவசிய தேவையின்றி, இருசக்கர வாகனங்களில் செல்வோரை, போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை
 அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கில் சுற்றித்திரிந்த 5,326 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்-ஊரடங்கில் சுற்றியவர்களிடம் இருந்து போலீசார், 5,326 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும், மாவட்ட காவல் துறை மேற்கொண்டுள்ளது.எனினும், அத்தியாவசிய தேவையின்றி, இருசக்கர வாகனங்களில் செல்வோரை, போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில், 5,475 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன; 5,326 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இருப்பினும், சில இடங்களில் சர்வ சாதாரணமாக கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முக கவசம் அணியாமல் கூட்டமாக இருப்பது, பலருக்கும் தொற்றுபரவும் சூழலை உருவாக்குகிறது.காஞ்சிபுரம், ஒலிமுகமது பேட்டை பகுதியில் காலை, மாலை நேரங்களில், சைக்கிளில் விற்பனை செய்யும் டீ குடிப்பதற்காக, அவ்வாறு கூட்டமாக இருக்கின்றனர். அப்பகுதியில் கூட்டத்தை தவிர்க்க, போலீஸ் ரோந்து செல்ல வேண்டும் என, சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202107:48:00 IST Report Abuse
oce பிடித்த வாகனங்கள் ஒன்று விடாமல் ஏலத்தில் விட்டு ஏல விற்பனையை அரசு கணக்கில் சேர்த்தால் கலைஞர் உணவகத் திறப்புக்கு உதவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X