பொது செய்தி

தமிழ்நாடு

கலர் மாறுது கல்லணை: முதல்வர் ஸ்டாலின் திறப்பாரா ?

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
தஞ்சாவூர்: மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை முழுவதும் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. அணையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விருப்பமான பச்சை நிறத்தை மாற்றி, ஊதா நிறத்தில் வர்ணம் பூசப்படுகிறது.மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக,

தஞ்சாவூர்: மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை முழுவதும் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. அணையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விருப்பமான பச்சை நிறத்தை மாற்றி, ஊதா நிறத்தில் வர்ணம் பூசப்படுகிறது.



latest tamil news



மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக, கல்லணை புதுப்பொலிவு பெற்று வருகிறது.குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், ஜூன் 16ம் தேதி இரவு, தஞ்சை மாவட்டம், கல்லணையை வந்தடையும்.இதனால், கல்லணையில் உள்ள, 116 ஷட்டர்களும், 'கிரீஸ்' வைத்து, முறையாக செயல்படுகிறதா என்பதை, பொதுப்பணி துறை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.
புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக, கரிகால் சோழன், காவிரி அன்னை, ராஜராஜ சோழன், அகத்தியர், விவசாயி சிலைகள் உள்ளிட்ட அணை முழுதும் வண்ணம் பூசும் பணிகள், முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அணை பகுதியில் உள்ள மணல் திட்டுகளும் அகற்றப்பட்டு வருகிறது.


latest tamil news



சென்டிமென்ட்கல்லணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். தற்போது, டெல்டாவில் அமைச்சர்கள் யாரும் இல்லாததால், திருவாரூர் மாவட்ட வாரிசான முதல்வர் ஸ்டாலின், நேரடியாக வந்து கல்லணையை திறப்பது பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என, சென்டிமென்டான கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-202101:05:30 IST Report Abuse
Guna Gkrv ஸ்டாலின் எந்த அரசியலும் பண்ணல நல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கு
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஜூன்-202122:39:50 IST Report Abuse
தமிழவேல் ரோலரால் அடிக்க அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். ஸ்ப்ரே பெயிண்ட் செய்ய இயலாத இடங்களில், ப்ரஷாலேயே இன்னும் இவ்வளவு பெரிய இடங்களுக்கு அடிப்பது பெயிண்டும் அதிகமாகும் நேரமும் மிக அதிகமாகும்.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
06-ஜூன்-202119:11:01 IST Report Abuse
பெரிய ராசு மக்கள் வரிப்பணம் கலரா போகுது நடுத்தர வர்க்கம் ஏழையா போகுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X