குல தெய்வ கோவிலில் முதல்வர் ரங்கசாமி வழிபாடு | Dinamalar

குல தெய்வ கோவிலில் முதல்வர் ரங்கசாமி வழிபாடு

Added : ஜூன் 06, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது குல தெய்வ கோவிலில் தரிசனம் செய்தார்.ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட முதல்வர் ரங்கசாமி, ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் முருகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார்.அரசியலில் எந்த முடிவு எடுப்பதற்கு முன்பாக, சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி ஜீவ சமாதிக்கு சென்று வருவார். திலாஸ்பேட்டையில் அப்பா பைத்தியம்

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது குல தெய்வ கோவிலில் தரிசனம் செய்தார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட முதல்வர் ரங்கசாமி, ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் முருகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார்.அரசியலில் எந்த முடிவு எடுப்பதற்கு முன்பாக, சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி ஜீவ சமாதிக்கு சென்று வருவார். திலாஸ்பேட்டையில் அப்பா பைத்தியம் சுவாமிக்கு கோவில் அமைத்து, சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கி வருகிறார். ரங்கசாமி, முதல்வராக பொறுப்பேற்ற போதிலும், சபாநாயகர், அமைச்சர் பதவி பங்கீட்டில் கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் உடன்பாடு ஏற்படாததால் அமைச்சரவை அமைக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உள்ள தனது குல தெய்வ கோவிலான பூரணி புஷ்கலா அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.பின்னர் கோவில் எதிரில் உள்ள குதிரை சிலையின் காலில், தனது வேண்டுதல் சீட்டை கட்டினார்.

சனிக்கிழமையான நேற்று, திலாஸ்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.முதல்வரின், குல தெய்வ வழிபாடு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X