மலையாளத்தில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது!

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (35) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.டில்லியில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்று ஜிப்மர். தற்போது ஒரு சுற்றறிக்கையின் மூலம் தேசியளவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு
Delhi, GovtHospital, Malayalam, டில்லி, மருத்துவமனை, மலையாளம்,

புதுடில்லி: டில்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்று ஜிப்மர். தற்போது ஒரு சுற்றறிக்கையின் மூலம் தேசியளவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு கேரளாவிலிருந்து அதிகமான செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளம் தெரியாத சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது நிறைய சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் செவிலியர் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து செவிலியர் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மலையாளம் தெரியாத போது அந்த மொழியில் பேசுவது உதவியற்ற நிலையையும், சிரமங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே அனைத்து செவிலியர்களும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை தான் தொடர்புக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியிருந்தார்.


latest tamil news




இந்த சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்றது. காங்., வயநாடு எம்.பி., ராகுல், திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் ஆகியோர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது அவ்வறிக்கையை வாபஸ் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.G.RAMAN - MADURAI,இந்தியா
06-ஜூன்-202121:40:53 IST Report Abuse
N.G.RAMAN கேரளகாரர்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு இது. அவர்களுக்கு பிற மொழிகள் தெரிந்தாலும் வேண்டுமென்றே மலையாளத்தில்தான் பேசுவார்கள். கோவை, நாகர்கோயில் போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் , பேருந்துகள் போன்றவைகளில் பணிபுரியும் கேரளாக்காரர்கள் தமிழில் பேசுவதே கிடையாது. இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. மற்ற மொழி பேசுவோருக்கு இது எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
Rate this:
Kumar Senthil - Raleigh,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-202120:03:12 IST Report Abuse
Kumar Senthilமலையாளம் தமிழும் ஒன்னுதான் அது ஒரு பேச்சு வழக்கம்(அக்ஸ்ன்ட்) மாறுபட்டு உள்ளது. அவர்களும் நம் சகோதர்களே.....
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
06-ஜூன்-202121:31:24 IST Report Abuse
Viswam அது என்னவோ மலையாள சேச்சிகள்தான் நர்ஸுகளாக நிறைய மாநிலங்களில் இருக்கிறார்கள். ஷிப்டு டூட்டி செய்ய விருப்பம், சேவை செய்யும் மனப்பான்மை, எங்குவேண்டுமானாலும் வேலை செய்யும் துணிச்சல், ஹாஸ்டல் வாழ்க்கை இவர்களுக்கு தானாக வருகிறது. வெளிநாடுகளிலும்கூட இவர்களுக்கு டிமாண்ட் இருக்கிறது. தாய்மொழி தெரிந்தவர்களிடம் மிகவும் நன்றாக எடுத்துச்சொல்லி மருத்துவஉதவி செய்வதை நிறைய மும்பையில் பார்த்திருக்கிறேன். ஹாஸ்டல்களில் கூட்டமாக வாழும் சேச்சிகள் பரஸ்பரம் சந்தித்தால் தாய்மொழியில் பேசிவிட்டுப்போகிறார்கள். அதெற்கென்ன குறை ? நோயாளிகளை கவனிக்க டெல்லியில் ஹிந்தி தெரியாதவர்களை எடுக்காமல் இருந்தால் பிரச்சினை தீர்ந்தது. யாருக்கு என்ன காண்டோ, இந்த மாதிரி ஒரு சர்குலர் போட்டு அதை மறுநாளே தடுத்து நிறுத்தும்படியான நிலை. அனாவசிய ஆணி அடித்து புடுங்கப்பட்டது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-ஜூன்-202121:27:06 IST Report Abuse
Pugazh V நிஜ நிலவரத்தை பதிவிட வேண்டி எழுதினால் பதிவிட மறுப்பு ஏன்?? பரவாயில்லை. சும்மா கேட்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X