சென்னை: கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கொங்குமண்டல பொறுப்பாளராக கனிமொழியை நியமிக்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாக திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா அலை வீசத் துவங்கியதும், துாத்துக்குடி மாவட்டத்தில், எம்.பி., என்ற முறையில், கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம்காட்டினார் கனிமொழி.மைக்ரோ சிஸ்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊராட்சி வாரியாக, ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்தும் ஏற்பாடுகளை செய்தார்.கிராம மக்களை சந்தித்து தடுப்பூசி போட்டால் தான் உயிரை பாதுக்கும் பயன்களை அவர்களிடம் விளக்கிக் கூறி, விழிப்புணர்வு முகாம்களும் நடத்தி சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக, தமிழகத்தில் முதல்முறையாக டாக்ர்கள், மருத்துவ பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி மையத்தை துாத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி துவக்கி வைத்தார். நடமாடும் தடுப்பூசி மையத்திற்கு கிராமமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசி மையங்கள் போதுமான அளவு அமைத்த பின் அடுத்தக்கட்டமாக, பொதுமக்களுக்கு தடுப்பூசியின் அச்சத்தை போக்கும் வகையில் வீடு, வீடாக கனிமொழி சென்று, ஓட்டு கேட்பது போல், தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பிரசாரம் செய்தார்.
பெண்கள் ஓட்டுக்களை கவர
வீடு தேடி கனிமொழி சொன்ன பிறகும் தடுப்பூசி போடமால் இருக்கக் கூடாது என்பதால், கிராம அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கையால், கொரோனா பாதிப்பு துாத்துக்குடி மாவட்டத்தில் குறைந்து வருகிறது.சட்டசபை தேர்தலுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கனிமொழி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

கொங்குமண்டலத்தில் பெண்கள் ஓட்டுக்களை கவர இது உதவிய. எனவே தி.மு.க., பலவீனமாக காணப்படும் கொங்குமண்டலத்தில் கொரோனாவை ஒழிக்க கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்றும், அவரது நிர்வாகத் திறமையால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். தி.மு.க.,வின் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என, தி.மு.க., மூத்த நிர்வாகிகளும் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கொங்குமண்டலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், துாத்துக்குடி பாணியில் தொற்று குறைப்பதற்கான பணிகளில் கனிமொழியை ஈடுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE