சென்னை: இல்லத்தை ஆளும் மங்கையரிடம் மறைந்திருக்கும் திறமைகள் ஏராளம். அவற்றை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியாக தனித்திறன் போட்டிகளை தொடர்ந்து நடத்த இருக்கிறது தினமலர் நாளிதழ்.
அந்த வகையில், நான்காவது வாரமாக இன்று(ஜூன் 6) போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இன்றைய போட்டியில் முகுடம் சூட விருப்பமுள்ள மங்கையர் கீழ்கண்ட திறன் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டும் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினால் போதும். இப்பவே தயாராகுங்க, மகுடம் உங்களுக்குத்தான்!



* எம்ப்ராய்டரி
அனைவரையும் கவரும் அழகிய எம்ப்ராய்டரி செய்து, அதை ஒரு நிமிட வீடியோவாக படமாக்கி அனுப்புங்க; பரிசு வெல்லுங்க!
* வீட்டு வரபேற்பறை
அழகாக பராமரிக்கப்படும் உங்கள் வீட்டு, வரவேற்பரை பற்றிய விளக்கத்துடன் கூடிய ஒரு நிமிட வீடியோ அனுப்புங்க பரிசு வெல்லுங்க!
*வண்ணக்கோலம்
உங்கள் வீட்டு வரவேற்பறையில், கண் கவரும் பல வண்ணங்களில் ரங்கோலி கோலம் படைத்து அசத்துங்க ; பரிசை வெல்லுங்க!
போட்டியில் பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 50 பேருக்கு ஆச்சர்ய பரிசு உண்டு. பங்கேற்பாளர்கள், டெலிகிராம் செயலியில் வீடியோவை அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் பெயர், முகவரி தொடர்பு எண் அனுப்ப வேண்டியது முக்கியம்.
போட்டி நாள்: இன்று ( ஜூன் 6)
நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை
டெலிகிராம் எண்: 93602 75216
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE