சிங்கங்களுக்கு கோவிட் பாதிப்பு எப்படி ? விசாரித்தார் ஸ்டாலின்

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (56) | |
Advertisement
செங்கல்பட்டு: வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 11 சிங்கங்களில் ஒன்பது சிங்கங்களுக்கு கோவிட் தொற்று இருப்பது ஜூன் 3ல் உறுதியானது. அதில், 'நீலா' என்ற பெண் சிங்கம் 3ம் தேதி உயிரிழந்தது.இதையடுத்து, கொரோனா தொற்று உறுதியான எட்டு
ஸ்டாலின், சிங்கம், கொரோனா, கோவிட், வண்டலூர், உயிரியல் பூங்கா

செங்கல்பட்டு: வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 11 சிங்கங்களில் ஒன்பது சிங்கங்களுக்கு கோவிட் தொற்று இருப்பது ஜூன் 3ல் உறுதியானது. அதில், 'நீலா' என்ற பெண் சிங்கம் 3ம் தேதி உயிரிழந்தது.இதையடுத்து, கொரோனா தொற்று உறுதியான எட்டு சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news




தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர்கள், உயிரியல் பூங்கா டாக்டர்கள், அவற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், கவிதா, 23, சசி, 19, என்ற இரு பெண் சிங்கங்கள், கோவிட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், சிங்கங்களுக்கு கொரோனா ஏற்பட்டது குறித்தும், சிகிச்சை குறித்தும் நேரில் ஆய்வு செய்தார். பேட்டரி வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-202110:49:40 IST Report Abuse
HONDA சிங்கம் எங்க பிடுங்கிட போதுன்னு முதல்வரை முன்னவிட்டாங்களா
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
07-ஜூன்-202106:48:17 IST Report Abuse
ravi தமிழ்நாட்டில் சிறுத்தைகளுக்கு கொரோனா வரும்போது சிங்கங்களுக்கு வராதா?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
07-ஜூன்-202105:57:36 IST Report Abuse
meenakshisundaram ஆஹா தமிழகம் 'வல்லரசாக 'ஆகிடுச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X