தடுப்பூசி டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை: அமைச்சர்

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (84) | |
Advertisement
ஊட்டி: கோவிட் தடுப்பூசி டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.இன்று காலை, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை பார்வையிட்டார். பின், ஊட்டி கோல்ப் கிளப்பகுதியில், 447 கோடி
தடுப்பூசி, அமைச்சர், மா.சுப்பிரமணியன், தமிழகம்,

ஊட்டி: கோவிட் தடுப்பூசி டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.


இன்று காலை, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை பார்வையிட்டார். பின், ஊட்டி கோல்ப் கிளப்பகுதியில், 447 கோடி ரூபாயில், கட்டப்பட்டு வரும், மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கூடலூரில் தனிமைப்படுத்தப்பட்பகுதிகளை பார்வையிட்டார்.


latest tamil news
பின், அமைச்சர் மா. சுப்ரமணியன், நிருபர்களிடம் கூறுகையில், கோவிட் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஜூலை மாதம் இறுதிக்குள் முடிவடைகிறது. கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதல் துவங்கும், என்றார்.

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா உடனிருந்தனர்.

இதன் பின்னர், மசினகுடியில் கோவிட் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர், அமைச்சர் கூறுகையில், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும். ஜூன் மாதம் இறுதிக்குள் 36.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசிக்காக சர்வதேச அளவில் டெண்டர் விட்டன. இதனை எந்த நிறுவனமும் எடுக்க முன்வரவில்லை. இதற்கு மத்திய அரசை குறைகூறுவது அபத்தமாக இருக்கும். முதல்வருடன் பேசி மீண்டும் டெண்டர் விடப்படும் எனக்கூறினார்.கருப்பு பூஞ்சை நோயால் 921 பேர் பாதிப்புஊட்டியில், மதியம் தலைமையில், கோவிட் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அளவில் கருப்பு பூஞ்சை நோயால், 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, 30 ஆயிரம் மருந்துகள் கேட்கப்பட்டது. 1790 மருந்துகள் வந்துள்ளது. அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று மருந்து, மாற்று சிகிச்சை ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து, 13 மருத்துவ வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அறிக்கை வந்த பின் முதல்வரிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் கட்டணம் வசூலித்த 10 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 40 மருத்துவமனைகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 கொரோனா பரிசோதனை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில், 62 இடங்களில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டுள்ளது. இதில், வானியம்பாடியில் யுனானி சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில, 269 கொரோனா பரிசோதனை மையங்களில், 200 தனியார் பரிசோதனை மையம், 69 அரசு பரிசோதனை மையமாக உள்ளது. தற்போது, கூடலூர் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
07-ஜூன்-202120:05:55 IST Report Abuse
M  Ramachandran கருணாநிதி காட்டிய வழியில் தி.மு.க - Budapest,ஹங்கேரி இந்த அதி மேதாவி ஹங்கேரி இந்தியாவில் உள்ளவரை தெளிவு இல்லாமல் அடிப்படை விவரம் கூட இல்லாமல் / தெரியாமல் அங்கிருந்து கூவுது. இஙகு தமிழ் நாட்டில் வட்டம் சிறுவட்டம் எல்லாம் தடுப்பூசியை மிரட்டி அரசு மருத்துவ மனையிலிருந்து எடுத்து கொண்டு போவுது. அதை கண்டிக்க துப்புண்டை உமக்கு? பிரதமரும் சில மாநிலங்களில் தடுப்பூசியை வீணாக்குகிறார்கள் என்று அதில் தமிழகம் மூன்றாம் இடத்திலுள்ளது. மேலும் முன்பெல்லாம் போட்டுகொல்லாதீர்கள் அது மோடி ஊசி என்று கூவி திரிந்து இப்போ நாக்கில் நரம்பில்லாமல் பேசும் வர்க்கம். தவிர நாம் எழலை நாடுகளுக்கு தடுப்பூசி கொடுக்க வில்லை என்றால் அவர்களை யார் காப்பாற்றுவார்கள்? இது உம போன்ற மனிதர்களுக்கு மண்டையில் ஏறாது. நமது சமூக பொறுப்புணர்ச்சியை கேவலமாக பேசும் ஜென்மங்களுக்கு அடிபடிதேவையான .... அது....இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Nisha Rathi - madurai தமிழக ஒன்றிய முதல்வரை ஒழிப்போம் இந்தியப்பேரரசுவை காப்போம் ,இந்தியா
07-ஜூன்-202116:45:32 IST Report Abuse
Nisha Rathi தடுப்பூசி டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை: அமைச்சர் கதறுங்க டா
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-202106:27:27 IST Report Abuse
Fastrack டெண்டர் சமர்ப்பிப்பதற்குமுன் Pre bid மீட்டிங் நடப்பது வழக்கம் ..அப்போவே தெரிந்திருக்குமே யாரும் வரப்போவதில்லை என்று...பாலு மற்றும் ஜகத்ரக்ஷகன் ஆலைகளிலேயே தயாரிக்க ஏற்பாடு பண்ணலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X