நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
கோல்கட்டா: நிவாரண பொருட்களை திருடியதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வென்ற சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியைநந்திகிராமில் சுமார் 1,800 வாக்குகளில் வீழ்த்தியவர் சுவேந்து அதிகாரி. முன்னதாக திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவுக்கு
FIR, BJP, Suvendu Adhikari, Stealing, சுவேந்து அதிகாரி, நிவாரண பொருட்கள், திருட்டு, வழக்குப்பதிவு, மேற்குவங்கம்

கோல்கட்டா: நிவாரண பொருட்களை திருடியதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வென்ற சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியைநந்திகிராமில் சுமார் 1,800 வாக்குகளில் வீழ்த்தியவர் சுவேந்து அதிகாரி. முன்னதாக திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவுக்கு நெருக்கமானவராக இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார். இதனால் மம்தா, இவர் மீது ஏக எரிச்சலில் உள்ளார். புயல் சேதங்களை பார்வையிட மேற்கு வங்கம் வந்த பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்ததால், கோபமடைந்த மம்தா பிரதமரையே அரை மணி நேரம் காக்க வைத்து அவமதித்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் கிழக்கு மெதின்பூர் மாவட்டத்தில் உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீதும் அவருடைய சகோதரரும் முன்னாள் கந்தி நகராட்சி தலைவருமான சவுமேந்து அதிகாரி மீதும், அதே மாநகராட்சியின் உறுப்பினரான ரத்னதீப் மன்னா என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.


latest tamil news


அந்த புகாரில், “மே 29 அன்று மதியம் 12:30 மணிக்கு, சுவேந்து அதிகாரி, அவரது சகோதரர் மற்றும் முன்னாள் நகராட்சி தலைவர் சவுமேந்து அதிகாரி ஆகியோர் உத்தரவுப்படி, நகராட்சி அலுவலக கிடங்கை அத்துமீறி திறந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை தூக்கிச் சென்றனர். அவர்கள் இதற்காக தங்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்ட மத்திய ஆயுதப் படைகளையும் பயன்படுத்தினர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது கண்டி போலீசார் இப்புகாரை ஏற்று சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது திருட்டு வழக்கு பதிந்துள்ளனர். இது மேற்குவங்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.,வும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பொருட்களை திருடுவதாக பலமுறை குற்றம்சாட்டியிருக்கிறது. தற்போது அதே குற்றச்சாட்டில் பா.ஜ.,வின் தலைவர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவேந்து அதிகாரியின் உதவியாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதே நாளில் இவ்வழக்கும் பதியப்பட்டுள்ளது.

சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளர் ரகல் பேரா, 2019-ல் நீர்ப்பாசன மற்றும் நீர்வழி அமைச்சகத்தில் வேலை வாங்கி தருவதாக ஒருவரிடம் ரூ.2 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வுகள் குறித்து சுவேந்து ஆதிகாரி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
07-ஜூன்-202107:49:03 IST Report Abuse
Ellamman கடைசில சுவேந்து பவிஷு இது தானா??
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
07-ஜூன்-202112:29:55 IST Report Abuse
Ellammanஜமுக்கால திருடன்... இனி பீசப்பி ஆள் பிடிக்கும்போது கொஞ்சம் பார்த்து பிடிக்கவும்... இல்லை சேர்ந்த பின்னர் மாறிவிட்டாரா??...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-ஜூன்-202107:35:20 IST Report Abuse
Darmavan மோடி மெத்தனம் காட்டுகிறார் .வன்முறைக்கு காரணமான மம்தா பேகம் அரசை டிஸ்மிஸ் செய்யாமல்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-ஜூன்-202106:52:26 IST Report Abuse
Loganathan Kuttuva தேர்தல் முடிவுக்கு பின் வீல் சேர் வேண்டாம் சாரதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X