வீடுகளுக்கு ரேசன் பொருள் விநியோகம்: நாடு முழுவதும் அமல்படுத்த கெஜ்ரிவால் கோரிக்கை

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: ரேசன் பொருட்களை வீடுகளில் விநியோகம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இதனை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.டில்லியில் ரேசன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு கெஜ்ரிவால் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்த
Arvind Kejriwal, Aam Aadmi Party, Kejriwal,Doorstep, ration delivery scheme, India ,Covid-19, Delhi CM, ஆம் ஆத்மி, கெஜ்ரிவால்

புதுடில்லி: ரேசன் பொருட்களை வீடுகளில் விநியோகம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இதனை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

டில்லியில் ரேசன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு கெஜ்ரிவால் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இதற்கு மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது வினியோக துறை எதிர்ப்பு தெரிவித்தது. 'இந்த திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும்' என தெரிவித்திருந்தது. இதையடுத்து திட்டத்தை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news
இந்நிலையில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: டில்லியில் வீடுகளுக்கே நேரில் சென்று மக்களுக்கு ரேசன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை நாங்கள் வகுத்திருந்தோம். இந்த திட்டத்தை அடுத்த வாரம் அமல்படுத்த இருந்தோம். எனினும் தங்களிடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை என்பதால் 'இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது' என மத்திய அரசு கூறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: வீடுகளில் ரேசன் பொருட்களை வழங்கும் டில்லி அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது ஏன்? தேசிய நலன் கருதி, இந்த திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். கோவிட் காலத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொற்று பரவும் மையமாக ரேசன் கடைகள் மாறிவிடும். பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணிகள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேசன் பொருட்களை ஏன் வழங்கக்கூடாது. வீடுகளுக்கு ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை. குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் கடந்த 5 முறை மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.


latest tamil newsமேற்கு வங்க முதல்வர் மம்தா, மஹாராஷ்டிரா, டில்லி, ஜார்க்கண்ட் அரசுகள், விவசாயிகள், லட்சத்தீவு மக்கள் என அனைவருடனும் மத்திய அரசு சண்டையிட்டு கொண்டு உள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு சண்டையிட்டு கொண்டிருந்தால் கோவிட்டை எப்படி கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
07-ஜூன்-202109:52:42 IST Report Abuse
vbs manian இது மட்டமான சுய விளம்பரம். மத்திய அரசு அரிசி கோதுமை பருப்பு ஆகியவற்றை கோல்முதல் செய்து மாநிலங்கள் வழியாக மக்களுக்கு கொடுக்கிறது. மாநிலம் ஒரு தபால் நிலையமே. ஏதோ தானே கோல் முதல் செய்து கொடுப்பது போன்று மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி புபிளிசிட்டி. நடைமுறையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ரேஷன் பொருட்களை பதுக்கி போய் கணக்கு எழுத வாய்ப்புள்ளது. அனுமதி கொடுக்க கூடாது.
Rate this:
Cancel
07-ஜூன்-202108:39:13 IST Report Abuse
Mahesh Kumar muthalla Delhi la bus la porathukku apply pannina e pass approve panna sollu un government aalungala... 10 naal aachu apply panni..... intha latchanathula ration veettukku varumama...pali poduratha vittuttu seiya vendiya velaya sei....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-ஜூன்-202107:26:11 IST Report Abuse
Darmavan இவர் மக்கள் வரிப்பணத்தில் சுய விளம்பரம் தேடுகிறார். தமிழ் நாட்டு டீவியை கூட விடவில்லை.டெல்லி எதிர் கட்சி வழக்கு போட்டு இதை நிறுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X