நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்: ப.சிதம்பரம்

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (101) | |
Advertisement
புதுடில்லி: கோவிட் தொற்றின் பொருளாதார விளைவுகளால் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: கோவிட் பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை (lower middle class)
PChidambaram, LowerMiddleClass, Poorer, Congress, சிதம்பரம், நடுத்தர மக்கள், ஏழைகள், காங்கிரஸ், எம்பி

புதுடில்லி: கோவிட் தொற்றின் பொருளாதார விளைவுகளால் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: கோவிட் பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை (lower middle class) எப்படிப் பாதித்திருக்கிறது என்று ஒரு அறிவு பூர்வமான ஆய்வை ஒரு வல்லுநரின் துணையுடன் நடத்தினேன். 1,004 நபர்கள் ஆய்வில் கலந்து கொண்டார்கள். கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம் மற்றும் ஊதியம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்தார்கள்.


latest tamil news


758 நபர்கள் தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதாகச் சொன்னார்கள், 725 நபர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்கள், 329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்றனர் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள்; 702 நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் இவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது? 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும் தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஹாதேவன் - CHENNAI,இந்தியா
07-ஜூன்-202111:16:03 IST Report Abuse
மஹாதேவன் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்து கொரோனா பரவ காரணமாக இருந்து இருக்கிறார் ...இவரை ஏன் கொரோனா பரப்பிய குற்றத்திற்காக கைது செய்ய கூடாது .....
Rate this:
Cancel
karikalan - chennai,இந்தியா
07-ஜூன்-202110:45:10 IST Report Abuse
karikalan நீ சொல்றது சரிதான். ஆனால் மக்கள் பணத்தை கொள்ளையடித்த நீ அத பேசுறது தான் வேடிக்கையா இருக்கு. இங்க பெரும்பான்மை அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க வர்றாங்களே தவிர, மக்களுக்கு சேவை செய்ய வரல. ஆகவே, நீயும் அந்த கூட்டத்தில உள்ளவன் தான். உன் நார வாய மூடு. முடிஞ்சா நீ கொள்ளையடிச்சதில, ஒரு லட்சம் கோடிய எடுத்து கோவிட்ல பாதிக்க பட்டிருக்கும் மக்களுக்கு செலவு செய். திருடின பணத்தில் ஒரு பகுதியை திருப்பி குடுத்த மாதிரியாவது இருக்கும். உனக்கு விமோச்சனமும் கிடைக்கும்.
Rate this:
Cancel
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-202110:01:28 IST Report Abuse
Mahalingam Laxman A research to find all people are affected by carona is not required. With all these all politicians d wealth( excluding und) is increasing many fold from one election to another. How?? This requires not only research but also remedial immediate action.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X