ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த கவுன்சில், கொரோனா தொடர்பான மருந்துகள், உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழுவை அமைத்துள்ளது. 'இந்த குழுவில் தமிழகத்தை ஏன் சேர்க்கவில்லை' என கேள்வி எழுப்பியிருந்தார் தியாகராஜன். தமிழகத்திற்கு 4,000 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.இது, நிதி அமைச்சகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'இப்போது தான் முதல் தடவையாக, ஜி.எஸ்.டி., கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இது குறித்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு முன்பே, வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்' என, முணுமுணுப்பு எழுந்துள்ளது. \
மேலும், அந்த கூட்டத்தில் பாதியிலேயே தியாகராஜன் எழுந்து சென்றுவிட்டார். தன்னால், ஆறு மணி நேரம் உட்கார முடியாது என்றும் கூறியுள்ளார். தமிழக நிதி அமைச்சரின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்கின்றனர் நிதி அமைச்சக அதிகாரிகள்.இதற்கு முன், பல மணி நேரத்துக்கு தொடர்ச்சியாக கூட்டம் நடந்துள்ளதை, அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
'தமிழகத்திற்கு தேவையான விவகாரங்களைப் பற்றி பேசாமல், எதற்கு வீண் சண்டையில் இறங்குகிறார்; இவர் வெளிநாட்டில் படித்தவர்; ஆனால் இவரது பேச்சு அப்படி இல்லையே' என, வியக்கின்றனர் அதிகாரிகள்.'மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்பும் போது, எதற்கு நிதி அமைச்சர் தேவையில்லாமல் பேசுகிறார்' என்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்..
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE