அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை:வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து,அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், விலங்குகள் பராமரிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, தொற்று பாதிப்புக்கு உள்ளான சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, அதிகாரி கள் மற்றும் டாக்டர்கள், முதல்வரிடம் விளக்கினர்.செங்கல்பட்டு மாவட்டம்,
Lions, Corona, CM Stalin, வண்டலூர், உயிரியல் பூங்கா, முதல்வர்,ஸ்டாலின்,ஆய்வு

சென்னை:வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து,அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், விலங்குகள் பராமரிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, தொற்று பாதிப்புக்கு உள்ளான சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, அதிகாரி கள் மற்றும் டாக்டர்கள், முதல்வரிடம் விளக்கினர்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன.


பெண் சிங்கம்

இந்நிலையில், இங்குள்ள 11 சிங்கங்களில் ஒன்பதுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது, ஜூன் 3ல் உறுதியானது. அதில், 'நீலா' என்ற பெண் சிங்கம் அன்றைய தினமே உயிரிழந்தது. இதையடுத்து, கொரோனா தொற்று உறுதியான எட்டு சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர்கள், உயிரியல் பூங்கா டாக்டர்கள், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இருப்பினும், கவிதா, 23; சசி, 19, என்ற இரு பெண் சிங்கங்கள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சைஇந்நிலையில், வண்டலுார் உயிரியல் பூங்காவில் வன விலங்குகள் பராமரிப்பு குறித்தும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அறிய, முதல்வர் ஸ்டாலின்நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர்கள், உயிரியல் பூங்கா வனவிலங்கு டாக்டர்கள் ஆகியோரிடம், சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம், அவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர். பின், பூங்காவில் உள்ள விலங்குகளின் காப்பாளர்கள் மற்றும் பூங்கா அதிகாரிகள் அனைவருக்கும், தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.


உலாவும் பகுதி



தொடர்ந்து, 'பேட்டரி' வாகனத்தில், சிங்கங்கள் உலாவும் பகுதி, சிங்கங்கள் மற்றும் வெள்ளை புலிகளின் இருப்பிடங்களில் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, வனத்துறை தலைவர் யுவராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


புலிகள், சிறுத்தைகளுக்குரத்த மாதிரி பரிசோதனை

சிங்கங்கள் பாதிக்கப்பட்டதால், மத்திய உயிரியல் பூங்கா ஆணைய உத்தரவுப்படி, வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள, 31 வெள்ளை மற்றும் வங்க புலிகளுக்கும், ஏழு சிறுத்தைகளுக்கும், சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மாதிரிகளை, ஐதராபாதில் உள்ள மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்திற்கு அனுப்புவதாக தெரிகிறது.

கடந்த, 3ம் தேதி முதல் இப்பணிகள் துவங்கி உள்ளதாகவும், இம்மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள், இன்று பூங்கா நிர்வாகத்திற்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.


ஊழியர்களுக்குகொரோனா தொற்று?

வண்டலுார் உயிரியல் பூங்காவில், சிங்கங்களை பராமரித்து வந்த, பூங்கா ஊழியர்கள் மூன்று பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, பூங்கா ஊழியர்கள் சிலர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், ஐந்து சிங்கங்களுக்கு, பசியின்மை மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதை அறிந்து, அவற்றை பராமரித்த மூன்று ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில், மூவருக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-202120:00:13 IST Report Abuse
 rajan இது எல்லாம் ஒரு செய்தி. இந்த செய்தியை நேற்றிலிருந்து தொலைக்காட்சிகள் தட்டிக் கொண்டு உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை எந்த தொலைக்காட்சியிலும் சொல்லவில்லை. அதாவது கோதாவரி காவேரி இணைப்பு திட்டம். வரைவுத் திட்டம் ஒன்றை மத்திய அரசு ஆந்திரா தமிழ்நாடு தெலுங்கானா அரசுகளுக்கு அனுப்பி கருத்து கேட்டுள்ளது. இதனால் மிகவும் பயனடையப் போவது தமிழகம். தமிழக்குதிற்கு 250 டி எம் சி தண்ணீர் கிடைக்கும். சென்னைக்கு 25 டிஎம்சி கிடைக்கும். சென்னைக்கு தற்போதைய தேவை 12 டிஎம்சி. தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரமாக கீழ் பாடப்போகும் மத்திய அரசின் இந்த செய்தியை தொலைக்காட்சிகள் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஜே நியூஸ் மற்றும் பாலிமர் தொலைக்காட்சிகளில் மட்டுமே இது பற்றிய செய்தி வாசிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம் என்றால் தினமலர் கூட இந்த செய்தியை வெளியிடவில்லை எனக்குத் தெரிந்தவரை ஏனென்றால் நான் தினந்தோறும் அவ்வப்போது தினமலர் செய்திகளை மொபைலில் பார்த்து வருகிறேன். நன்றி
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
07-ஜூன்-202119:18:52 IST Report Abuse
Loganathaiyyan 8.2 கோடி மக்கள் முக்கியமா இல்லை 8-9 சிங்கங்கள் முக்கியமா இதன் அர்த்தம் எனக்கு இன்னும் புரியவில்லை???வனவிலங்கு காட்சியகம் நடத்துகின்றாரா???இல்லை அரசு????
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
07-ஜூன்-202110:21:01 IST Report Abuse
Nagercoil Suresh ஆய்வகத்திலிருந்து வைரஸ் உருவானது உறுதிப்படுத்தப்படுகிறது..பல லட்ச்சம் ஆண்டுகளை கடந்து வந்த விலங்கு இனம் கூட இதற்கு பலியாகுகிறது...அமெரிக்கா அதிபர் ஒருவர் கூறுகிறார் எண்டால் அதில் கண்டிப்பாக உள் அர்த்தம் இருக்கும் காரணம் அவர்களும் சேர்ந்தே அதே ஆய்வகத்திற்கு பணம் வழங்கி வந்துள்ளார்கள்...நல்ல வேளை பொது கழிப்பிடங்கள் மூலம் இது அதிகம் பரவவில்லை ஒருவர் தும்முவது மூலமாக தான் அதிகம் பரவுகிறது, கழிப்பிடத்திலிருந்து அதிகம் பரவியிருந்தால் சிறு பிள்ளைகள் பள்ளிகளுக்கு ஸ்கூல் பேக் தூக்குவதைபோல் நாமும் ஒரு ஒரு டாய்லெட் பேக் சுமக்க வேண்டிய நிலை வந்திருக்கும் அதேபோல ஏற்கனவே மைக் கேமரா என வைத்திருப்பவர்களுக்கு தான் அதிக கஸ்டமாக இருந்திருக்கும்....முதல்வர் ஏற்கனவே பல நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்காவை சுத்தி பார்க்கணும்னு நினைச்சும் நடக்கவே இல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X