அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு: மோடிக்கு பன்னீர்செல்வம்., கடிதம்

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை:'நீட்' உட்பட உயர் கல்வியில் சேருவதற்கான, அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர 2011ல் 'நீட்' தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.அப்போது,
 'நீட்' தேர்வு, மோடி,பன்னீர்செல்வம்.,, கடிதம்

சென்னை:'நீட்' உட்பட உயர் கல்வியில் சேருவதற்கான, அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர 2011ல் 'நீட்' தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அவர் தன் கடைசி மூச்சு வரை, நீட் தேர்வை எதிர்த்தார்.


பயிற்சி

தமிழகத்தில், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, பல்வேறு நடவடிக்கைகளை ஜெ., எடுத்தார். கடந்த, 2005ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க உத்தரவிட்டார். பின் 2011ல், மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதல் பெற, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக ஒப்புதல் கிடைக்கவில்லை.மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வால், தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நீட் தேர்வை சந்திக்க, தனியே பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டியுள்ளது.

கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களால், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை.ஏழை மாணவர்களால், தனியே கட்டணம் செலுத்தி, பயிற்சி வகுப்புக்கு சென்று பயிற்சி பெற முடியவில்லை.ரத்துஅதனால், அவர்கள் மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.

எனவே, நீட் தேர்வு உட்பட அனைத்து உயர்நிலை கல்விக்கான பொது நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கல்வி, தொழிற்கல்வி உட்பட அனைத்திலும் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம்., கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஜூன்-202101:48:52 IST Report Abuse
unmaitamil அரசியல் வியாதிகள், உங்கள் விளையாட்டை அரசியலோடு வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பிலும், மக்கள் ஆரோக்கியத்திலும் விளையாடாதீர்கள். திறமையான மருத்துவர்கள் மக்களுக்கு தேவை.
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
07-ஜூன்-202123:21:32 IST Report Abuse
Tamil இந்த ஆளு இருந்தபோது தான் அடுத்த மாநிலத்தை சேர்ந்தோர் தமிழக வேலைவாய்ப்பில் பணிபுரிய சட்டம் இயற்றியவர். பணம் சம்பதிக உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றது கைவந்த கலை , ஆசிரியர் வாரியத்தில் இவர்கள் அடித்த கொள்ளை கொஞ்சமா நஞ்சமா, பணம் கொடுத்து பாடம் எடுப்பவன் எப்படி தரமான கல்வியை கொடுப்பார்கள், இவர் அதிமுகவில் வராமல் இருந்திருந்தால்பிஜேபி தமிழகத்தில் வந்திருக்க வாய்ப்புஇல்லை JJ சிலகாலம் இருந்திருப்பார்என்றெய் தோன்றுகிறது.
Rate this:
Cancel
Musthafa - Cuddalore,இந்தியா
07-ஜூன்-202123:19:03 IST Report Abuse
Musthafa இவர் ஆட்சி காலத்தில் கடிதம் எழுதாமல் திமுக ஆட்சியில் எழுதுறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X