பொது செய்தி

தமிழ்நாடு

பொது தேர்வுகள் ரத்தால் அரசுக்கு ரூ.20 கோடி மிச்சம்

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அரசுக்கு, 20 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். வழக்கமாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும் சராசரியாக, 50 ரூபாய் வரை செலவாகும். வினாத்தாள் தயாரிப்பு, அச்சடித்தல்,
Class 12, exam, cancelled, பொது தேர்வு, ரத்து, அரசு,ரூ 20 கோடி, மிச்சம்

சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அரசுக்கு, 20 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். வழக்கமாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும் சராசரியாக, 50 ரூபாய் வரை செலவாகும்.

வினாத்தாள் தயாரிப்பு, அச்சடித்தல், முதன்மை விடைத்தாள் தயாரித்தல், தேர்வு மையம் அமைத்தல்.போக்குவரத்து ஏற்பாடுகள், அதிகாரிகள், ஆசிரியர்களுக்கான பணிகள் ஒதுக்கீடு, அதற்கான மதிப்பூதியம், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான வசதி ஏற்படுத்துதல், விடைத்தாள் திருத்தம் என, பல்வேறு விதமாக செலவுகள் செய்யப்படும்.

இந்த ஆண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய, மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.இதன் காரணமாக, இந்த பொது தேர்வுகளுக்கு செலவிடப்படும் நிதியில், 15 முதல், 20 கோடி ரூபாய் வரை, அரசுக்கு மிச்சமாகியுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, அச்சடித்தல் மற்றும் வெற்று விடைத்தாள் அச்சடித்தல் ஆகியவற்றுக்கு மட்டும், நிதி செலவிடப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
07-ஜூன்-202119:21:30 IST Report Abuse
Loganathaiyyan 50% கமிஷன் எடுத்துக்கொண்ட பின்பு இவ்வளவு மிச்சமா???
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஜூன்-202115:41:49 IST Report Abuse
Pugazh V ஒருத்தர் : அப்படின்னா எல்லா வருடமும் ரத்து இன்னொருத்தர் 20 கோடியை 20,000 கோடி ஆக்கிட்டார். என்னய்யா எழுதறீங்க????
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஜூன்-202115:41:06 IST Report Abuse
Pugazh V ஒருத்தர் : அப்படின்னா எல்லா வருடமும் ரத்து செய்து விடலாமா ங்கறார். இதை ஏன்.. மோடி அரசு +2 பரிட்சை ரத்து செய்த போது கேட்கவில்லை??? என்னய்யா எழுதறீங்க????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X