ஊரடங்கு எல்லாம் ஊருக்கு மட்டும்தான்! 700 பேரை திரட்டிய 'சீனியர்' அமைச்சர்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (86) | |
Advertisement
திருச்சி : ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நலத்திட்டம் என்ற பெயரில், தமிழக அமைச்சரே, 700 பேருக்கு மேல் மக்கள் கூட்டத்தை கூட்டியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி, கருமண்டபத்தில், 45வது வார்டு தி.மு.க., சார்பில், 1,500 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில்,
lockdown, TN fights Corona, DMK

திருச்சி : ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நலத்திட்டம் என்ற பெயரில், தமிழக அமைச்சரே, 700 பேருக்கு மேல் மக்கள் கூட்டத்தை கூட்டியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி, கருமண்டபத்தில், 45வது வார்டு தி.மு.க., சார்பில், 1,500 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பங்கேற்று, அப்பகுதியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தி.மு.க., நிர்வாகிகள் 200 பேர் என, 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகள் வாங்கும் போது, மக்கள் சமூக இடைவெளியை மறந்து, முண்டியடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.பல கட்சி நிர்வாகிகள் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை.


latest tamil newsமக்கள் அதிகம் கூடினால் கொரோனா பரவும் என்பதால் தான், தமிழக அரசு ஊரடங்கை அறிவித்து, பொது போக்குவரத்தை ரத்து செய்து, வீடுகளுக்கே காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அதையெல்லாம் மறந்து, தி.மு.க.,வின் சீனியர் அமைச்சரான நேருவே, இவ்வளவு கூட்டத்தை திரட்டியது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

.நலத்திட்ட உதவிகள் கொடுக்க வேண்டும் என்றால், கட்சியினர் மூலம் வீடு வீடாக சென்று கொடுத்து இருக்கலாம். கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் வேளையில், திருச்சியில் இப்படி அதிகளவில் மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்தியதும், அதை சீனியர் அமைச்சர் நேரு அனுமதித்ததும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
08-ஜூன்-202106:41:11 IST Report Abuse
Sai YES, IT TAKES A LOT FOR SOMEONE TO ASK YOU FOR HELP. தருகிறார்கள் என்றால் ஓடிவரமாட்டார்கள் நாட்டு நிலைமை அப்படியாகிவிட்டது வெட்ட வெளிச்சாகிறது வீடு வீடாக கொண்டு தரலாம் என்பவர்கள் அப்படி செய்யட்டுமே தானும் செய்ய மாட்டான் நொட்டை மட்டுமே சொல்வான்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஜூன்-202120:14:29 IST Report Abuse
Vena Suna மிக மிக ஆபத்தான முன்மாதிரி
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
07-ஜூன்-202118:02:34 IST Report Abuse
A P எலக்‌ஷனுக்கு முன் பணப்பட்டுவாடா வீடியோ பார்த்தேன். அதில் இவருடைய குரலில், கெட்ட கெட்ட தமிழ் வழக்குமொழி சொற்கள் வேறு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X