உ.பி., - பா.ஜ., பொறுப்பாளர் கவர்னருடன் திடீர் சந்திப்பு

Added : ஜூன் 07, 2021
Share
Advertisement
லக்னோ : உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலை, மாநில பா.ஜ., பொறுப்பாளர் ராதா மோகன் சிங் சந்தித்து பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில் மாநில பா.ஜ., பொறுப்பாளராக, ராதா மோகன் சிங் உள்ளார்.உ.பி., சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்க உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக, கட்சியில் சிலர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். எனினும் முதல்வராக ஆதித்யநாத்

லக்னோ : உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலை, மாநில பா.ஜ., பொறுப்பாளர் ராதா மோகன் சிங் சந்தித்து பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில் மாநில பா.ஜ., பொறுப்பாளராக, ராதா மோகன் சிங் உள்ளார்.உ.பி., சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்க உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக, கட்சியில் சிலர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். எனினும் முதல்வராக ஆதித்யநாத் தொடர்ந்து நீடிப்பார் என, பா.ஜ., தலைமை அறிவித்தது.இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடு பற்றி, குறிப்பாக, கொரோனா பரவல் காலத்தில் அவரது செயல்பாடுகள் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் மாநில பொறுப்பாளர் ராதா மோகன் சிங், சமீபத்தில் ஆலேசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதன்பின், கவர்னர் ஆனந்திபென் படேலை, ராதா மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்புக்கு பின், ராதா மோகன் சிங் கூறுகையில், ''மாநில பா.ஜ., பொறுப்பாளர் என்ற முறையில், கவர்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், மாநில அமைச்சரவையை விரிவுப்படுத்துவது பற்றி முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சரவை உடனடியாக மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இல்லை,'' என்றார்.செயல்பாடு அடிப்டையில்தேர்தலில் வாய்ப்புஉத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கைகளை, பா. ஜ., துவக்கியுள்ளது. மாநிலத்தில், ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.முதல் கட்டமாக, கட்சி எம்.எல்.ஏ.,க்களின், ஐந்து ஆண்டு செயல்பாடுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. சிறப்பாக செயல்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X