எச்.ஐ.வி., பெண்ணின் உடலில் 216 நாட்கள் : 30 முறை உருமாறிய வைரஸ்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : தென் ஆப்பிரிக்காவில், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், 216 நாட்களுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில், 30 முறை உருமாற்றம் அடைந்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.எச்.ஐ.வி., புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும்.இதுபோன்ற நபர்களை கொரோனா தொற்று தாக்கும் போது, அதன்
AIDS,HIV,Corona Virus, Covid 19

புதுடில்லி : தென் ஆப்பிரிக்காவில், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், 216 நாட்களுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில், 30 முறை உருமாற்றம் அடைந்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.

எச்.ஐ.வி., புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும்.இதுபோன்ற நபர்களை கொரோனா தொற்று தாக்கும் போது, அதன் பாதிப்பு தீவிரமாகவே இருக்கும். இவர்களின் உடலில் இருந்து தொற்று பாதிப்பு எளிதில் குணமாகாது. நீண்ட நாட்களுக்கு, உடலிலேயே வைரஸ் இருக்கும் என கூறப்படுகிறது.

சாதாரண நபரை விட, இவர்களை கொரோனா தொற்று பாதிக்கும் போது, உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்,தென் ஆப்பிரிக்காவில், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட, 36 வயது பெண்ணுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவரது உடலில், 216 நாட்களுக்கு கொரோனா வைரஸ் இருந்துள்ளது. அந்த நேரத்தில், 30 முறை, வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.


latest tamil news


அந்த பெண்ணின் உடலில் உருமாறிய வைரஸ், பரவக்கூடிய வகை தானா என்பதை, நிபுணர்கள் பரிசோதித்து வருகின்றனர். பொதுவாக, எச்.ஐ.வி., நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெண் விவகாரத்தில், உயிரிழப்பு விகிதம், எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்ததாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.'டெல்டா' வீரியம் அதிகம்!


ஐரோப்பிய நாடான பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரிட்டனில் கொரோனா தொற்று பரவல் சமீபத்தில் அதிகரிப்பதற்கு, 'டெல்டா' வகை வைரஸ் பரவலே காரணம். இது, மற்ற வகை வைரஸ்களை விட, 40 சதவீதம் அதிக வீரியத்துடன் பரவக்கூடியது. எனவே, வருகிற, 21ம் தேதி முதல் தளர்வுகளை அறிவிப்பதாக இருந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

'டெல்டா' வகை வைரசால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர், ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
07-ஜூன்-202117:13:39 IST Report Abuse
dina இதற்கு தான் பெண் மிகவும் பயங்கரமானவள் என்று சொன்னர்களோ ?
Rate this:
Cancel
07-ஜூன்-202107:46:35 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அதிர்ச்சி அளிக்கிறது
Rate this:
Cancel
07-ஜூன்-202107:25:01 IST Report Abuse
சந்திரன் நல்ல ஆரோக்கியமாக இருந்தவங்க கொரணா தாக்கிய ஒரு வாரத்தில் இறந்து போயிருக்காங்க. ஆனால் இவ்ளோ நாள் அந்த பெண் உடம்பில் கொரணா உருமாறி உறுமாறி விளையாண்டிருக்குன்னா பாத்துக்கோங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X