கர்ப்பிணியருக்கு தடுப்பூசி: டாக்டர்கள் அறிவுறுத்தல்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | |
Advertisement
புதுடில்லி : 'கர்ப்பிணியரின் நலனை கருத்தில் வைத்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.கொரோனாவால் கர்ப்பிணியர் அதிக அளவில் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, டில்லியைச் சேர்ந்த வர்தமான் மஹாவீர் மருத்துவ கல்லுாரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், இது தொடர்பாக ஆய்வு
pregnancy, covid 19 vaccine, Pregnant women

புதுடில்லி : 'கர்ப்பிணியரின் நலனை கருத்தில் வைத்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனாவால் கர்ப்பிணியர் அதிக அளவில் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, டில்லியைச் சேர்ந்த வர்தமான் மஹாவீர் மருத்துவ கல்லுாரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், இது தொடர்பாக ஆய்வு நடத்தினர்.


latest tamil news


நேற்று வெளியிட்ட இதன் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில், கர்ப்பிணியர் சேர்க்கப்படாததாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து, அவர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்ற தெளிவற்ற முடிவுகளாலும், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கர்ப்பிணியரின் நலனை கருத்தில் வைத்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X