10ம் வகுப்பு மதிப்பெண் வழிகாட்டுதல்: விரைந்து வெளியிட பெற்றோர் கோரிக்கை

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை : 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை, விரைவாக வெளியிட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. அதைப் பின்பற்றி, தமிழக பாட திட்டத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அத்துடன், பிளஸ் 2
SSLC exam, class 10, Marks

சென்னை : 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை, விரைவாக வெளியிட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. அதைப் பின்பற்றி, தமிழக பாட திட்டத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அத்துடன், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மதிப்பெண்ணை நிர்ணயம் செய்வதற்கான, வழிகாட்டுதல்களை தயாரிக்க, பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், ௧௦ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும், அரசு தாமதமின்றி வெளியிட வேண்டும் என, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, தேர்வே நடத்தாமல் ஏற்கனவே, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு மதிப்பெண் எப்படி நிர்ணயிக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.


latest tamil news


அந்த மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு என, எந்தவித தேர்வும் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை.எனவே, பத்தாம் வகுப்பில் எந்த வித மதிப்பெண்ணும் நிர்ணயிக்க முடியாத சூழல் உள்ளது. அதற்கு பதில், ஒன்பதாம் வகுப்பில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளின் மதிப்பெண்ணை கணக்கில் எடுக்கலாம் என, அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டு உள்ளன.

எனவே, இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை தாமதிக்காமல் முடிவெடுத்து, மதிப்பெண் வழிகாட்டுதலை அறிவிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பு திய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், மாணவர்களை பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்க்க மதிப்பெண் தேவைப்படுவதால், இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
07-ஜூன்-202114:34:09 IST Report Abuse
Sridharan Venkatraman எல் கே ஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வாங்கிய மார்க்குகளை சராசரியாக எடுத்து அதன் அடிப்படையில் - ஐந்து வருஷம் பீஸ் வாங்கி கொண்டு - பத்து / ப்ளஸ் 2 / நீட் / கல்லூரி செமஸ்டர் பரிக்ஷைகள் ஏதும் இன்றி எம் பி பி எஸ் / இன்ஜினியரிங் பட்டம் கொடுத்து விடலாம்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
07-ஜூன்-202113:53:18 IST Report Abuse
Sai பத்தாம் வகுப்பு முடித்து நேரடியாக இரண்டு + நான்காண்டு அல்லது மூன்று + மூன்று ஆண்டு என இரண்டு விதமான B.Tech படிப்பில் சேரலாமென்று மும்பை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது இதில் நேரடியாக சேர்வதால் + 1 , +2 NEET JET இன்னபிற தேர்வுகள் தேவையற்று போகின்றன சம்பந்தப் பட்ட மாணவர்களும் பெற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் இங்கே சொல்லப் பட்டுள்ளது
Rate this:
Cancel
jagadesh - chennai,இந்தியா
07-ஜூன்-202109:36:57 IST Report Abuse
jagadesh இதை தவிர சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கும் அவர்கள் எதிர்காலம் கருத்தில்கொண்டு ஆள் பாஸ் வழங்க வேண்டும், இதனால் அவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து படிக்க வசதியாயிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X