உத்தர பிரதேச பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி, நட்டா படங்கள் நீக்கம்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச பா.ஜ., அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தில் இருந்து பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரின் படங்களை நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 2022ம் ஆண்டு துவக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, 'கோவிட் பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக
UP, BJP_Twitter Page, Removed, PMModi, JPNadda, Picture, Photo, உபி, உத்தரபிரதேசம், பாஜக, டுவிட்டர், பக்கம், பிரதமர், மோடி, நட்டா, படம், நீக்கம்

லக்னோ: உத்தர பிரதேச பா.ஜ., அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தில் இருந்து பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரின் படங்களை நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 2022ம் ஆண்டு துவக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, 'கோவிட் பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை' என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் பலமாக முன் வைக்கப்படுகிறது. கங்கை நதியில் நிறைய சடலங்கள் மிதந்தது, ஆதித்யநாத் அரசுக்கு தேசிய அளவில் நெருக்கடியை உண்டாக்கியது. சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.,வின் கோட்டை என கருதப்படும் இடங்களில் கூட பா.ஜ., படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஏ.கே.சர்மாவை பா.ஜ., தலைமை முன்னிலைப்படுத்துவதாக செய்திகள் வெளிவந்தன.


latest tamil news



ஏ.கே.சர்மா, மோடி முதல்வராக இருந்த காலம்தொட்டு அவருடன் பயணித்தவர். அவர் தற்போது பா.ஜ.,வில் இணைந்து எம்.எல்.சி.,யாக உள்ளார். பிரதமரின் வாரணாசி தொகுதியில் தொற்றை கட்டுப்படுத்தும் மிக முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மோடியின் நம்பிக்கைக்குரியவரான அவர் விரைவில் உ.பி., அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், யோகி தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம், யோகி ஆதித்யநாத்தின் 49வது பிறந்தநாளில், அம்மாநில அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.


latest tamil news



ஆனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டுவிட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலிடத்திற்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் இடையே அதிருப்தி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக உ.பி., மாநில பா.ஜ., அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தில் மோடி, நட்டா உடன் இருக்கும் படத்தை நீக்கி அவர்கள் இல்லாத புதிய படம் பதிவேற்றப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த பக்கத்திலோ அல்லது பா.ஜ., தலைவர்களோ எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandiyan - Chennai,இந்தியா
08-ஜூன்-202108:41:50 IST Report Abuse
Pandiyan பாஜக ஆளும் ஒரு ஒரு மாநிலத்திலும் ..இந்த அடிதடிகளை எதிர்பார்க்கலாம் ..முற்பகல் செய்வினை பிற்பகல் விளையும் ....அடிதடி வெற்றிகரமாக வாழ்த்து..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஜூன்-202123:24:38 IST Report Abuse
Pugazh V யோகி அடுத்த பிரதமர் என்று தமிழ் நாட்டு. பீஜேபீ. சொன்னார்கள். அதனால் தான் தல போட்டோவையே தூக்கிட்டார். ந.ரா.ரா.நாதன் ஆருராங், ராஜன் கேரளம், நடேசன், கொக்கி கொமாரு, வெ.சு.மணியன் , சிரியார் எல்லாம் எங்கே எங்கே எங்கே????
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூன்-202121:40:15 IST Report Abuse
தல புராணம் ஹா ஹா ஹா ... தாமரை மல்லாந்திடிச்சி.. பாஜாகா (யோ) தனித்து நிக்க போகுதோ ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X