வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு; பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு; 10 ஆண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் சுறுசுறுப்பு

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (167) | |
Advertisement
சென்னை: ரூ.300 கோடி மதிப்பிலான வடபழநி முருகன் கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி உத்தரவால் தூங்கி கொண்டிருந்த அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது

சென்னை: ரூ.300 கோடி மதிப்பிலான வடபழநி முருகன் கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி உத்தரவால் தூங்கி கொண்டிருந்த அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.latest tamil news


சென்னை வடபழனி முருகன் கோயிலின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் சொத்துக்களை மீட்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துசமய அறநிலைய அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சரும், அதிகாரிகளும் களம் இறங்கினர். சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலம் 10 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வாகன காப்பகமாக மாற்றப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்கள், குடோன்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. 300 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்களை அறநிலையத்துறை அதிரடியாக மீட்டது. இதே போல தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள் மீட்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்தமிழகம் முழுவதும் பல்வேறு இந்து கோயில்களின் சொத்துக்கள் சில அந்தஸ்து பெற்ற நபர்களிடம் சிக்கி தவிக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் அதி தீவிர நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருக்கும். கோயில் நிலம் மீட்பது தொடர்பாக கோயில் ஊழியர்கள், நிர்வாகத்தினர், பக்தர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர். அடுக்கடுக்கான புகார்கள் அனுப்பினர். ஆளும் கட்சியினர், சிலரிடம் கூட்டு சேர்ந்து நடவடிக்கைக்கு தடையாக இருந்தனர்.


ஏன் இந்த நடவடிக்கை இப்போது ?பல ஆண்டுகளாக கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை கவனமாக கேட்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சேகர் பாபுவுக்கு அதிரடி உத்தரவிட்டார். இதனையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் களம் இறங்கினர். இதன் முதல்படியாக வட பழநி கோயிலின் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டன.
" இது டிரெய்லர் தான் இனி தான் மெயின் பிக்சர் "
latest tamil news
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது ; தனியார் சம்பாதிப்பதை கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை தடுக்க காவல் துறை, மாநகராட்சி, அறநிலைய துறை இணைந்து இன்று வடபழநி கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். சாலிகிராமம் மற்றும் சுற்று பகுதிகளில் வணிக நிறுவனங்கள், வாகன காப்பகங்கள், மற்றும் குடோன்கள் என பலரது வசமிருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கள் நிலம் மதிப்பு ரூ.300 கோடி ஆகும். இது டிரெய்லர் தான் இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள்.

எங்கள் துறையில் இந்து கோயில்கள் பொறுத்தவரையில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம். எந்த கோயில்களில் எல்லாம் வருமானம் உள்ளதோ , அது யார் பிடியில் ஆக்கிரமிப்பு இருந்தாலும் அங்குள்ள தடைகளை உடைத்து திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்படும்.

மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.


latest tamil news

பக்தர்கள் வேண்டுகோள்:இது போன்ற ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டறிந்து இந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். வட பழநி கோயிலுக்கு சொந்தமான இந்த இடம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வந்தன. கோயில் தொடர்பாக அறநிலைய துறையிடம் கேட்டபோது நிர்வாக ரீதியாக காரணம் கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர் . கடந்த ஆளும் கட்சி ஆட்களின் பிடியில் இருந்தததால் இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இது போல் இனியும் நடக்காமல் இருக்க இந்த ஆக்கிரமிப்புக்கு காரணம் யார் என அறிந்து தற்போதைய அமைச்சரும், கமிஷனர் குமரகுருபரனும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்போதுதான் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க முடியும்.


இபிஎஸ் நடவடிக்கை எடுப்பாரா ?ஆக்கிரமிப்புக்கு துணைபோன அதிமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. வடபழநி கோயில் சொத்துக்கள் தொடர்பாக ஆக்கிரமிப்புக்கு காரணமாக இருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ.,வாக இருந்தாலும் கட்சியை விட்டு நீக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆட்களின் செயல்களால் தான் ஆட்சியை இழந்தோம் என உணர வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுப்பார்களா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (167)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
08-ஜூன்-202110:44:33 IST Report Abuse
தமிழ்வேள் ஆக்கிரமிக்கப்பட்ட நில படத்தை பாருங்கள் ..நிற்கும் வாகனங்கள் அனைத்தும் சினிமா ஆட்களின் வாகனங்கள்..தற்போது சினிமா துறை யாருடைய /எந்த மத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் ...இதை செய்த லயோலா கூட்டம் திரும்ப ஆக்கிரமிக்க சகல தகிடுதத்த வேலைகளையும் வேதாகமத்தின் பெயரால் செய்யும் ....பிரியாணி கூட்டம் துணை போகும் ...இதை நிரந்தரமாக தடுக்க ஏதாவது செய்யவேண்டும் ...ஹிந்து அறநிலையத் துறையில் ஹிந்துக்கள் மட்டுமே பணிபுரியவேண்டும் ..ஆனால் பணிபுரிவது பெரும்பாலும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் .... கட்டுமரத்தின் கைங்கரியம் ..
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
08-ஜூன்-202105:32:55 IST Report Abuse
Rajasekaran நல்லது நடந்தால் பாராட்டத்தக்கதே ட்ரையல் , மெயின் பிக்சர் வசனமெல்லாம் இருக்கட்டும் . மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் , என்று பல கோவில்களுக்கு சொந்தமான தங்கள் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில் இருந்து மீட்க முடியாமல் அவதியில் தவிக்கும் அந்தந்த நிலங்களையும் மீட்பதுடன் , தமிழகத்தில் கோவில் சொத்துக்களுக்கான குத்தகை பாக்கி வைத்திருக்கும் அத்தனை பேர் மீதும் , அவர்கள் யாராக இருந்தாலும் , எவ்வளவு அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தாலும், தக்க நடவடிக்கை எடுத்து உரிவர்களியடம் அந்தந்த சொத்துக்களை ஒப்படைத்து , அதை மீண்டும் ஆக்கிரப்பிற்கு ஆளாகாமல் சட்டப்படி செய்யவேண்டிய நடவடிக்கைகளை எடுத்து அவைகளை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வலைத்தளத்தில் பதிவேற்றி , இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுவே அனைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பு . அப்படியே , சர்ச்சையை எழுப்பி வரும் ‘ மூலப் பத்திர விவகாரத்திற்கும், ஒரு நல்ல முற்றுப்புள்ளி வைக்க இந்த அரசு மெயின் பிக்ச்சரில் சேர்க்க முன்வரவேண்டும்
Rate this:
Cancel
Muthu Pandi - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூன்-202123:50:00 IST Report Abuse
Muthu Pandi கோவில் சொத்துக்களை தனியார் கொள்ளை அடிப்பதை இனி அனுமதிக்க மாட்டோம். அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம். - அமைச்சர் தகவல். தமிழக மக்களே - இனி அடுத்த ஐந்து வருடங்கள் பொண்டாட்டி குடும்பத்தை சாக்கிரதையா பாத்துக்குங்க அம்புட்டு தான் சொல்லுவேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X