ஊரடங்கில் தளர்வு: டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட்19 பெருந்தொற்றின் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, டில்லியில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பொருளாதார மீட்பு நடவடிக்கையாக இன்று முதல்

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட்19 பெருந்தொற்றின் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



latest tamil news



அதன்படி, டில்லியில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பொருளாதார மீட்பு நடவடிக்கையாக இன்று முதல் டில்லியில் மெட்ரோ, பேருந்து போன்ற சேவைகளுக்கும், போக்கு வரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. கடைகள், சந்தைகள் போன்றவைகளும் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டன.


latest tamil news



இந்நிலையில், ஒரு சில மணி நேரத்தில் டில்லி நகரின் முக்கிய சாலைகளில் அதிக அளவிலான வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கோவிட் பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில் எந்த தளர்வும் வேண்டாம்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
07-ஜூன்-202118:40:50 IST Report Abuse
Palanisamy Sekar கெஜ்ரிவால் இருக்கும் வரை டெல்லி நாறுவதை யாராலும் தடுக்கவே முடியாது. இந்தியாவிலேயே மிக மோசமான முதல்வர் என்றால் அது கேஜ்ரிவால்தான். நிச்சயம் கொரோனா மீண்டும் டெல்லியை தாக்கி அப்பாவி ஜனங்களை கொண்றுகுவிக்கும். பாவம் மக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X