கோவிட்டை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி வரும்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள, நம்மிடம் உள்ள ஒரே பேராயுதம் தடுப்பூசி தான், கோவிட்டை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி வரும் என பிரதமர் மோடி கூறினார்.பிரதமர் மோடி இன்று(ஜூன் 07) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோவிட் 2வது அலைக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. அதில், இந்தியா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது. ஏராளமானோர்,
PMNarendraModi, Narendramodi, Modi, பிரதமர், மோடி, நரேந்திரமோடி

புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள, நம்மிடம் உள்ள ஒரே பேராயுதம் தடுப்பூசி தான், கோவிட்டை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி வரும் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி இன்று(ஜூன் 07) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோவிட் 2வது அலைக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. அதில், இந்தியா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது. ஏராளமானோர், தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கடந்த நூற்றாண்டில் பெரிய பேரிடராக இது அமைந்துள்ளது. நவீன உலகம் கோவிட் போன்ற ஒரு பேரிடரை கண்டதில்லை.100 வருடங்களில் மிகவும் மோசமான பெருந்தொற்று இதுவாகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது. மருத்துவமனைகளையும், புதிய சுகாதார உள்கட்டமைப்பையும் அதிகளவில் ஏற்படுத்தி உள்ளோம். முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியும் விரைவுபடுத்தப்பட்டது.

மருத்துவமனைகள் அமைப்பதில் விரைவாக செயல்பட்டோம். புதிய சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளோம் . ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தேவை கணிக்க முடியாத அளவிற்கு ஏற்பட்டது. ரயில் விமானம் டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது.போர்க்கால அடிப்படையில் செயல்பட்டோம். மக்களுக்கு உதவ முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டன. அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தி வேகமாக அதிகரிக்கப்பட்டது. கோவிட் பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை 1.5 ஆண்டுகளில் வலுப்படுத்தி உள்ளோம்.


latest tamil news
மனித குலத்திற்கு கோவிட் மிகப்பெரிய எதிரி. கோவிட்டிற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மிக அவசியம்.தடுப்பூசி மட்டும் தான் கோவிட் தொற்றுக்கு எதிரான ஒரே கேடயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றன. மக்களுக்கு உதவ நமது முப்படைகளையும் பயன்படுத்தினோம். அத்தியாவசிய மருந்து பொருட்களின் உற்பத்தி மிகக் குறைந்த காலத்தில் அதிகரிக்கப்பட்டது.


உலகில் ஒருசில தடுப்பூசி நிறுவனங்களே உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் பலரை காப்பாற்றி உள்ளோம். ஒரே ஆண்டில் இரு தடுப்பூசிகளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி மட்டும் சரியான நேரத்தில் கண்டுபிடிக்காமல் இருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். 2வது அலையை எதிர்த்து போராட தடுப்பூசி தான் உதவியது. ஆரம்பத்தில் நமது தடுப்பூசி இயக்கம் மெதுவாக செயல்பட்டது. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய துயரத்தை கோவிட் ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளுக்காக சில தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தனது குடிமக்களை இந்தியா எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி பல நாடுகளில் எழுந்தது. இந்தியா குறித்த உலக நாடுகளின் சந்தேகத்திற்கு தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். உலகத்துடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என்பதை நமது விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். கோவிட் தொற்றுக்கு எதிரானத் தடுப்பூசியை இந்தியா உருவாக்கி இருக்காவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

கடந்த 50-60 ஆண்டுகால வரலாற்றை திரும்பிப்பார்த்தால், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இந்தியா பெறுவதற்கு ஒரு தசாப்தம் தேவைப்பட்டது. தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி வெளிநாடுகளில் நிறைவடையும். நமது தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரித்துள்ளோம். ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் தயாரித்து உலகிற்கு வழங்கி உள்ளோம்.

கோவிட் தடுப்பூசிகளின் சாத்தியக் கூறுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போதே நமது தடுப்பூசியின் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த தொடங்கிவிட்டோம். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. 23 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளை நாம் நம்புகிறோம். மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தில் போக்குவரத்து மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.

நமது விஞ்ஞானிகள் மீது இந்தியா நம்பிக்கை வைத்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டில் கோவிட்டை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி விரைவில் வரவுள்ளது. மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான கோவிட் தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும்.

தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிட்டது. வரும் நாட்களில் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்கப்படும். தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன்களப்பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றினர். மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. இவ்வாறு பிரதமர் பேசினார்.


9வது முறைஇந்தியாவில் கோவிட் பரவ துவங்கிய பின்னர் பிரதமர் மோடி இதுவரை 8 முறை நாட்டு மக்களிடம் உரையாற்றி உள்ளார். அப்போது, கொரோனா பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசின் சலுகைகள், தடுப்பூசி குறித்து பேசியிருந்தார். தற்போது 9வது முறையாக பேசியுள்ளார். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக குறைந்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
08-ஜூன்-202110:51:28 IST Report Abuse
G  Mahalingam உள் நாட்டில் தடுப்பூசி தயாரிக்கவில்லை என்றால் இந்தியா அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு இருக்கும். முதலில் மக்கள் தொகை குறைவான நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்று பிறகு இந்தியாவிற்கு வருவார்கள். அதற்குள் இந்தியாவில் அதிக உயிர் பலியாகி இருக்கும். கடந்த 60 ஆண்டுகளாக தடுப்பூசி இப்படிதான் கடைசியாக இந்தியாவுக்கு கொடுத்தார் கள். தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவில் இது தான் முதல் முறை.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
08-ஜூன்-202110:39:42 IST Report Abuse
Kumar தவறான தகவல்களை பலர் திட்டமிட்டு பரப்புகிறார்கள். நேற்றுவரை தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களை பரப்பினார்கள். பின் மாநில அரசுக்கு தடுப்பூசி வாங்கும் உரிமை வேண்டும் என்றார்கள். அது முடியவில்லை என்றதும் ,அதற்கு காரணம் மோடி என்றார்கள்.தடுப்பூசி இலவசமாக தர வேண்டும் என கூச்சல் போட்டார்கள். இப்பொழுது அது இலவசம் என்றவுடன் அதுதான் ஏற்கனவே உள்ள சட்டம் என்கிறார்கள். இலவசமாக எந்த நிறுவனமும் தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலாது. ஏன் அரசு ஊழியர்கள் பேரிடர் காலத்தில் இலவசமாக வேலை செய்வார்களா?.இல்லை குறைந்த ஊதியத்தில் வேலை செய்வார்களா?. மோடியின் மேல் உள்ள வெறுப்பின் அடையாளமாக இவர்கள் கூச்சல் இடுவது வழக்கமானது தான். தங்களின் முறைகேடான வருமானம் கிடைக்கவில்லை என்பதற்காக இவர்கள் போடும் கூச்சல் இது. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
08-ஜூன்-202110:31:04 IST Report Abuse
S. Narayanan சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்று சொல்கிறார்கள். அப்படி செய்தால் விடியல் வரும். ஆனால் இன்னும் இருட்டில் தான் பட்டினியாக மக்கள் நோயுடன் போராடுகிறார்கள். சொல்வது எவர்க்கும் எளிது. ஆனால் அதை செயல் படுத்துவது வெகு சிலரால் மட்டுமே முடியும். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செய்வது அவ்வளவு சுலபமல்ல ராஜா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X