பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 19,446 பேரும் மற்ற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 20,448 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 351 பேர் உயிரிழந்து உள்ளனர். 31,360 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 26 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 19,446 பேரும் மற்ற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 20,448 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 351 பேர் உயிரிழந்து உள்ளனர். 31,360 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 26 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 70,838 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 19,448 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,88,92,497 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 10,763 பேர் ஆண்கள், 8,683 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,24,643 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,32,000 ஆகவும் அதிகரித்து உள்ளது. 31,360 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,97,299 ஆக உயர்ந்தது.

351 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 103 பேர் தனியார் மருத்துவமனையிலும், 248 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,356 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news




மாவட்டம் வாரியாக படுக்கை விவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NoBs - chennai,இந்தியா
08-ஜூன்-202111:15:02 IST Report Abuse
NoBs மூன்று மாவட்டங்கள் கோவை ஈரோடு திருப்பூர் தமிழ்நாட்டின் பாதிப்பில் இருபத்தைந்து விழுக்காட்டுக்கும் மேல். எவ்வளவு நாள் ஊரடங்கு வேலை செய்யும் ....மக்கள் அடங்க வேண்டும் அறிவு பெற வேண்டும் ...வாழ்வின் அணுகுமுறை மாறாதவரை விடியல் இல்லை இல்லவே இல்லை.
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-202110:11:12 IST Report Abuse
velan தஞ்சையில் இன்னும் குறைந்த பாடில்லை . இதில் கடைகள் வேறு திறப்பு . கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் . நகராட்சி ஊராட்சி இன்னும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம் மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் கல்யாணம் காதுகுத்து வளைகாப்பு இறப்பு என்று மக்கள எப்போதும் போல இருக்கிறார்கள்
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
08-ஜூன்-202108:04:37 IST Report Abuse
karutthu இதற்கு முன்னாள் இவரை ... என நக்கலாக பேசியவர்கள் இப்போது முதல்வர் ஸ்டாலின் என மரியாதையாக பேசுகின்றனர் ..இது அவருக்கு கிடைத்த வெற்றி .....ஆனாலும் பெருமாள் கோயில் முன் பிரியாணி கொடுத்ததை இவர் வன்மையாக கண்டிக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X