மோடியின் இலவச தடுப்பூசி கொள்கை: ஸ்டாலின், பினராயி வரவேற்பு

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
புதுடில்லி: இலவச தடுப்பூசி கொள்கையை அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக, கேரள முதல்வர்கள் வரவேற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசியை இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும் வரும் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தடுப்பூசி கொள்கையை இன்று அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பால் நாட்டில் தடுப்பூசி பற்றக்குறை தீர்ந்துவிடும் என
 மோடி, இலவச தடுப்பூசி, கொள்கை,ஸ்டாலின், பினராயி, வரவேற்பு

புதுடில்லி: இலவச தடுப்பூசி கொள்கையை அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக, கேரள முதல்வர்கள் வரவேற்றுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியை இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும் வரும் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தடுப்பூசி கொள்கையை இன்று அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பால் நாட்டில் தடுப்பூசி பற்றக்குறை தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது மோடியின் அறிவிப்பிற்கு தமிழகம், கேரள முதல்வர்கள் வரவேற்றுள்ளனர்.
அதன் விவரம்:


latest tamil news




முதல்வர் ஸ்டாலின்: மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி கொள்கையை மாற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தடுப்பூசி பதிவு, நிர்வாக நடைமுறைகளை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்: மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கிட வேண்டும் என நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தேன். தற்போது அதனை பிரதமர் மோடி அறிவித்துள்ள முடிவை வரவேற்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில், எங்களின் கோரிக்கையை பிரதமர் ஏற்றது மகிழ்ச்சி.

காங். மூத்த தலைவர் சசி தரூர் : இதை கடந்த ஆண்டே மத்தியஅரசு செய்திருந்தால், கடந்த 6 மாதமாக நாம் பட்ட பெரும் சிரமத்தையும், துயரத்தையும் தவிர்த்திருக்க முடியும். அதை விட முக்கியமாக, நமக்கு போக கூடுதல் தடுப்பூசிகளை ஏற்றுமதியும் செய்திருக்கவும் முடியும். எப்படியாயினும், பிரதமர் மோடி மிக சரியான முடிவை கடைசியாக எடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
08-ஜூன்-202111:55:55 IST Report Abuse
அறவோன் இந்திய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றிகள் கோடி.......... 🙏
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
09-ஜூன்-202112:02:31 IST Report Abuse
Visu Iyerநீங்க வேற.. இதிலும் சிக்கல் இருக்குது...அது வரும் போது பாருங்கள்......
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
08-ஜூன்-202109:54:31 IST Report Abuse
G  Mahalingam மோடி அவர்களே தடுப்பூசி போடுவதை மத்திய அரசு கட்டுபாட்டில் கண்டிப்பாக வைக்க வேண்டும். ஆன்லைன் பதிவு செய்ய முடியாதவர்கள் ஆதார் கார்டை தடுப்பூசி மையத்தில் கொடுத்து பதிவு செய்து பிறகு ஊசி போடவும். அப்போதுதான் கணக்கு இருக்கும். திமுக காங்கிரஸ் அதிக விலைக்கு விற்று கொள்ளை அடிக்கடி முடியாது.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
08-ஜூன்-202109:51:06 IST Report Abuse
Tamilnesan தடுப்பூசி பதிவு, நிர்வாக நடைமுறைகளை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும் - செய்தி. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே........சொந்த நாட்டிலே.........நம் நாட்டிலே.........சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறான்.......சமயம் பார்த்து பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறான்.............இந்த பாட்டிற்கும் இந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லிங்கோவ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X