மோடியின் இலவச தடுப்பூசி கொள்கை: ஸ்டாலின், பினராயி வரவேற்பு| Dinamalar

மோடியின் இலவச தடுப்பூசி கொள்கை: ஸ்டாலின், பினராயி வரவேற்பு

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (84)
Share
புதுடில்லி: இலவச தடுப்பூசி கொள்கையை அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக, கேரள முதல்வர்கள் வரவேற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசியை இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும் வரும் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தடுப்பூசி கொள்கையை இன்று அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பால் நாட்டில் தடுப்பூசி பற்றக்குறை தீர்ந்துவிடும் என
 மோடி, இலவச தடுப்பூசி, கொள்கை,ஸ்டாலின், பினராயி, வரவேற்பு

புதுடில்லி: இலவச தடுப்பூசி கொள்கையை அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக, கேரள முதல்வர்கள் வரவேற்றுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியை இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும் வரும் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தடுப்பூசி கொள்கையை இன்று அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பால் நாட்டில் தடுப்பூசி பற்றக்குறை தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது மோடியின் அறிவிப்பிற்கு தமிழகம், கேரள முதல்வர்கள் வரவேற்றுள்ளனர்.
அதன் விவரம்:


latest tamil news




முதல்வர் ஸ்டாலின்: மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி கொள்கையை மாற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தடுப்பூசி பதிவு, நிர்வாக நடைமுறைகளை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்: மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கிட வேண்டும் என நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தேன். தற்போது அதனை பிரதமர் மோடி அறிவித்துள்ள முடிவை வரவேற்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில், எங்களின் கோரிக்கையை பிரதமர் ஏற்றது மகிழ்ச்சி.

காங். மூத்த தலைவர் சசி தரூர் : இதை கடந்த ஆண்டே மத்தியஅரசு செய்திருந்தால், கடந்த 6 மாதமாக நாம் பட்ட பெரும் சிரமத்தையும், துயரத்தையும் தவிர்த்திருக்க முடியும். அதை விட முக்கியமாக, நமக்கு போக கூடுதல் தடுப்பூசிகளை ஏற்றுமதியும் செய்திருக்கவும் முடியும். எப்படியாயினும், பிரதமர் மோடி மிக சரியான முடிவை கடைசியாக எடுத்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X