கூகுள் விளம்பரத்துக்கு பிரான்ஸ் அரசு அபராதம்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாரிஸ்: கூகுள் நிறுவனம்மீது தொடர்ந்து அதன் பயனாளர்களின் தனிநபர் சுதந்திரத்தை பறித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கூகுள் தேடுதளத்தில் நாம் ஒரு ஆன்லைன் வர்த்தகப் பொருள் குறித்த தேடினால் அந்தப் பொருள் நாம் செல்லும் இடமெல்லாம் பின்தொடரும்.சமூக வலைதளங்கள் எங்கு சென்றாலும் நாம் தேடிய பொருள் குறித்த விளம்பரம் நம் கண்முன்னே தோன்றும். ஒரு பொருளை சந்தைப்

பாரிஸ்: கூகுள் நிறுவனம்மீது தொடர்ந்து அதன் பயனாளர்களின் தனிநபர் சுதந்திரத்தை பறித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கூகுள் தேடுதளத்தில் நாம் ஒரு ஆன்லைன் வர்த்தகப் பொருள் குறித்த தேடினால் அந்தப் பொருள் நாம் செல்லும் இடமெல்லாம் பின்தொடரும்.latest tamil newsசமூக வலைதளங்கள் எங்கு சென்றாலும் நாம் தேடிய பொருள் குறித்த விளம்பரம் நம் கண்முன்னே தோன்றும். ஒரு பொருளை சந்தைப் படுத்துவதற்காக கூகுள் நிறுவனம் இவ்வாறு செய்வதாக இருந்தாலும் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இதுபோல தொந்தரவு செய்வதை பலர் விரும்புவதில்லை. இது ஒரு விமர்சனமாகவே பார்க்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள இணைய கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த திங்களன்று விதிமீறல் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு 20 கோடி யூரோ அபராதம் விதித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய ஊடகங்களான நியூஸ் கார், பிரஞ்சு டெய்லி பெல்ஜியம், குரூப் ரசல் ஆகியவை இதுகுறித்து கூகுள் நிறுவனத்தை குற்றஞ்சாட்டியுள்ளன. விளம்பரங்கள் மூலமாக தங்கள் ஆன்லைன் தளங்களை கூகுள் நிறுவனம் தொந்தரவு செய்வதாக மேற்கண்ட இந்த நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. அடுத்து பிரான்ஸ் இணைய கட்டுப்பாட்டு அமைப்பு கூகுள் நிறுவனத்திற்கு இந்த அபராதத்தை விதித்துள்ளது.\


latest tamil news
கடும் அதிருப்திமூன்றாம் நபர் சார்ந்த விளம்பரங்களை இணையதளங்களில் பதிவிடுவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகின்றனர். கூகுள் அல்காரிதம் இதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் தானாக முன்வந்து நிற்கின்றன என கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஜூன்-202108:29:37 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எந்த நிறுவனமாக இருந்தாலும் அந்த நாட்டின் சட்டத்திற்கு கட்டு பட வேண்டும். அவைகளுக்கு துணை போகும் போராளிகளை முதலில் உள்ளே தள்ள வேண்டும். அது திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் சரி.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
08-ஜூன்-202105:51:24 IST Report Abuse
 Muruga Vel கூகிள் செய்யும் எவ்வளவோ நல்லதை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்காமல் கூகிள் விளம்பரமில்லாமல் சேவை செய்ய கட்டணம் மாதந்தோறுமோ ஆண்டுக்கு ஒரு முறையோ வாங்கலாம் ..இத்திட்டம் யு டியூபில் இருக்கு ..
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
07-ஜூன்-202121:53:09 IST Report Abuse
கொக்கி குமாரு கூகுளிடம் உலகத்திலேயே யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் விஞ்ஞான முறையில் ஆட்டையை போடுவதில் வல்லவர் யார் என்று கேட்டால் உடனே திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி என்று சொல்லிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X