அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினருடன் சசிகலா பேச்சு: 'ஆடியோ' வெளியிட்டு அதிரடி

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை :'சசிகலா, அ.தி.மு.க.,வினர் யாருடனும் பேசவில்லை' எனக்கூறிய, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், சசிகலா மொபைல் போனில் பேசிய, ஆடியோ பதிவை வெளியிட்டு உள்ளனர்.சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது. ஆட்சியை பறிகொடுத்தாலும், 66
ADMK, Sasikala, Audio release

சென்னை :'சசிகலா, அ.தி.மு.க.,வினர் யாருடனும் பேசவில்லை' எனக்கூறிய, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், சசிகலா மொபைல் போனில் பேசிய, ஆடியோ பதிவை வெளியிட்டு உள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது. ஆட்சியை பறிகொடுத்தாலும், 66 இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியானது. இந்தச் சூழ்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தன் ஆதரவாளர்களுடன், மொபைல் போனில் பேசினார். அந்த ஆடியோக்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 'நான் விரைவில், அரசியலுக்கு வருவேன். கட்சியை வழி நடத்துவேன்' என, அவர் கூறி வருவது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது.


பதிலடி


இது தொடர்பாக, சமீபத்தில் இ.பி.எஸ்.,சிடம் கேட்டபோது, 'சசிகலா, அ.தி.மு.க.,வில் இல்லை. எனவே, அவர் குறித்து பேச விரும்பவில்லை. அவர், அ.ம.மு.க.,வினருடன், மொபைல் போனில் பேசி உள்ளார்' என்றார்.அதை பொய்யாக்கும் வகையில், அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசிய சசிகலா, அவர்களிடம், 'கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்' என்பதை கேட்டு, அவர்கள் வாயாலேயே, அ.தி.மு.க.,வில் அவர்கள் வகிக்கும் பொறுப்பை சொல்ல வைத்துள்ளார்.

மதுரையை சேர்ந்த, அ.தி.மு.க., இளைஞர் அணி செயலர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் பேசுகையில், சசிகலா கூறியிருப்பதாவது:கட்சியை அழிக்க விடமாட்டேன்; நிச்சயம் நான் வந்து விடுவேன். கவலைப்படாமல் இருங்கள்; நன்றாக செய்யலாம். கொரோனா இருப்பதால், அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்.


முயற்சி


இடைவெளி விட்டு, தள்ளி நின்று பேசுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்; மற்றவர்களையும் போட வையுங்கள்.உங்களை போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, கட்சியை யாரும் அழிக்க முடியாது. நம் கட்சி, தொண்டர்களால் உருவானது. தொண்டர்களுக்காகவே தலைவர்கள் இருக்க வேண்டும். தலைவர்களுக்காக தொண்டர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மாதிரி தான் நம் கட்சி இருந்தது. தொண்டர்கள் சேர்ந்து தான் தலைமையை முடிவு செய்து, அழகு பார்த்தனர். ஜெ.,வும் அப்படித்தான் வந்தார்; நன்றாக செய்தார். நானும் சரி, ஜெ.,வும் சரி, கடைகோடி தொண்டர்களையும், நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று சிந்தித்து தான் வேலை செய்தோம்.

எத்தனையோ பேருக்கு நல்வழி காட்டி உள்ளோம். நம் கட்சி தொண்டர்களும், தமிழக மக்களும் உயர, என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன். நீங்கள் தைரியமாக இருங்கள். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகவும், உயர்வுக்காகவும், நான் உழைத்துக் கொண்டு தான் இருப்பேன்; அதை யாரும் தடுக்க முடியாது. தொண்டர்கள் இருக்கிறீர்கள். நிச்சயம், எம்.ஜி.ஆர்., - ஜெ., காலத்தில் இருந்தது போல, கட்சியை கொண்டு வந்து விடுவோம். அதை நான் செய்து காட்டுவேன். விரைவில் எல்லாரையும் பார்க்கிறேன்.இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
08-ஜூன்-202117:01:08 IST Report Abuse
RajanRajan இது அந்த முருங்கை மரத்து மேலே இருந்து விசில் அடிச்சா போதும் அம்மாவழி கூடாரம் காலி ஆயிடுமோ என்னவோ. ஹூம் என்ன பண்ணுறது கண்டபடி ஊரான் வுட்டு நெய் ஊத்தியே வளர்த்த கூடமாச்சே.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
08-ஜூன்-202113:39:15 IST Report Abuse
Ram யோவ் நாராயண இந்த கொசு தொல்லை தாங்க முடியல
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
08-ஜூன்-202116:57:10 IST Report Abuse
Srinivas....///யோவ் நாராயண இந்த கொசு தொல்லை தாங்க முடியல/// இந்த கொசுவால்தான் இன்றுள்ளவர்களின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது........
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
08-ஜூன்-202113:28:20 IST Report Abuse
Dr. Suriya இவங்க தானே அம்மா இட்லி சாப்பிடுறாங்கன்னு வீடியோ விட்டது... இப்போ ஆடியோ வை விடறாங்க... நம்புங்க மக்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X