அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொண்டருக்கு அவமதிப்பு; மணல் வியாபாரிக்கு மரியாதை!

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
சென்னை: சால்வை அணிவித்த தொண்டரை அவமதித்த அமைச்சர் துரைமுருகன், மணல் வியாபாரியை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தது தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.கவனம்:பொதுப்பணி துறையில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நீர்வளத்துறையின் அமைச்சராக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணி
DMK, Durai Murugan, Minister, தொண்டர், அவமதிப்பு, மரியாதை , மணல் வியாபாரி,

சென்னை: சால்வை அணிவித்த தொண்டரை அவமதித்த அமைச்சர் துரைமுருகன், மணல் வியாபாரியை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தது தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


கவனம்:

பொதுப்பணி துறையில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நீர்வளத்துறையின் அமைச்சராக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தவர் என்பதால், துறையில் பல முன்னேற்ற பணிகளை மேற்கொள்வார் என, எதிர்பார்த்தனர். ஆனால், பதவி ஏற்ற வேகத்தில், மணல் குவாரிகளை திறப்பதற்கான பணிகளில், கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.


ஒப்பந்தம்:

அ.தி.மு.க., ஆட்சி யில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்காததால், பல ஆறுகளில் வெள்ள நீரோட்டம் இருந்து வருகிறது. குவாரிகளை திறந்தால், மழை காலங்களில் நீரோட்டம் பாதிப்பதுடன், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தேங்கி, ஆறுகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.இதை பற்றி கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில் மணல் விற்பனையில் ஈடுபட்ட மூன்று 'மாபியா'க்களை அழைத்து, தன் வீட்டிலேயே ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார்.

காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற பின், சென்னையில் இருந்து துரைமுருகன் தொகுதிக்கு சென்றபோது, கட்சியினர், சாலைகளில் நின்று வரவேற்பு அளித்தனர். காரின் கண்ணாடியை திறந்து விட்டபடி சென்ற துரை முருகனுக்கு, தொண்டர் ஒருவர் சால்வை அணிவிக்க முயன்றார். கார் சென்று கொண்டே இருந்ததால், சால்வையை அன்பாக காரில் வீசினார். காரில் இருந்த துரைமுருகன், சால்வையை துாக்கி, அதே வேகத்தில் வெளியில் வீசினார்.


சமூக வலைதளம்:


இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. கொரோனா பரவல் அபாயம் இருப்பதால், சால்வையை அமைச்சர் வெளியே வீசியதாக, ஆதரவாளர்கள் கூறினர். இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த மணல் வியாபாரி கரிகாலன் என்பவரை தன் வீட்டிற்கு அழைத்து, துரைமுருகன், மணல் அள்ளும் ஒப்பந்தம் செய்துள்ளார். துரைமுருகனும், அவரது மகனுமான வேலுார் எம்.பி., கதிர் ஆனந்தும் சேர்ந்து, பட்டு சால்வை அணிவித்து, அவரை கவுரவித்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சால்வை அணிவித்த தொண்டரை அவமதித்த துரைமுருகன், மணல் வியாபாரியை வீட்டிற்கு அழைத்து, மரியாதை செய்தது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'இப்போது மட்டும், கொரோனா பரவாதா' என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
14-ஜூன்-202115:44:20 IST Report Abuse
Ramu மிக மோசமான முன்னுதாரணம். அமைச்சரே மணல் வியாபாரியை வீட்டிற்கு அழைத்து கவுரவ படுத்தியது கண்டிக்கப்பட வேண்டியது. எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஜூன்-202106:50:48 IST Report Abuse
meenakshisundaram எண்ணிக்குய்யா திமுகவில் தொண்டனுக்கு மரியாதை கிடைத்தது ?அவன் அந்த காலத்திலேந்து போஸ்டர் ஒட்டவும் பசை காய்ச்சவும் தாநே செஞ்சான் ?ஸ்டாலின் எந்த தொண்டனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாரா ?இல்லே முக காலத்திலியேனும் இது உண்டா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202116:37:37 IST Report Abuse
J.V. Iyer நடப்பது எந்த அரசாங்கம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதானே? இப்போது குற்றம் சொல்லி என்ன பயன்?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூன்-202117:30:03 IST Report Abuse
madhavan rajanதொண்டனின் தயவு இனி பல ஆண்டுகளுக்கு தேவையில்லை. ஆனால் கொள்ளைக்காரர்களிடம் மாதந்தோறும் கமிஷன் வருமே. தொண்டனை பிறகு குவார்ட்டரும் பிரியாணியும் குடுத்து சமாதானம் செய்தால் மீண்டும் விடியல் ஆட்சிதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X