பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி : புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (15+ 19)
Share
Advertisement
புதுடில்லி,;''நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வரும் 21ம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்; இதற்கான செலவுகளை மத்திய அரசே ஏற்கும். இதுவரை மாநில அரசுகள் வாங்கி வந்த 25 சதவீத தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, கடும் தாக்கத்தை
மாநிலங்கள், இலவச தடுப்பூசி, திட்டம் , மோடி

புதுடில்லி,;''நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வரும் 21ம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்; இதற்கான செலவுகளை மத்திய அரசே ஏற்கும். இதுவரை மாநில அரசுகள் வாங்கி வந்த 25 சதவீத தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கை வசதி போன்றவற்றுக்கான தட்டுப்பாடு தற்போது சீரடைந்துள்ளது. தடுப்பூசிக்கான தட்டுப்பாடு தொடர்கிறது.


பாதுகாப்பு கவசம்இந்நிலையில் தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றியதாவது:கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பிரச்னையை சந்தித்து வருகிறோம். கொரோனாவுக்கு பலரை நாம் இழந்துள்ளோம். ஆனால், கொரோனா வைரசுக்கு எதிராக நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். தற்போதைக்கு இந்த வைரசுக்கு எதிராக உள்ள ஒரே பாதுகாப்பு கவசம், தடுப்பூசி மட்டுமே.தடுப்பூசிகள் நம் நாட்டில் கண்டுபிடிக்கப்படாவிட்டால், இங்கு தயாரிக்கப்படவில்லை என்றால், எவ்வளவு பெரிய பாதிப்புகளை, பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிட்டிருக்கும் என்பதை உணர வேண்டும்.


அனுமதிதற்போது நாட்டில் ஏழு நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து வருகின்றன. இதைத் தவிர மேலும் மூன்று தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று, தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியது.

மீதமுள்ள 50 சதவீதத்தில் பாதி, மொத்த தயாரிப்பில் 25 சதவீதத்தை மாநிலங்களே நேரடியாக குறிப்பிட்ட விலைக்கு வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ள 25 சதவீதத்தை, தனியார் மருத்துவமனைகள் வாங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், பழைய முறையே சிறப்பாக இருப்பதாக, பெரும்பாலான மாநிலங்கள் கூறியுள்ளன. இதையடுத்து, தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதுவரை மாநில அரசுகள் வாங்கி வந்த 25 சதவீத தடுப்பூசிகளையும், தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.

இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வரும் 21ம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இதற்காக மாநில அரசுகள் எதுவும் செலவிட வேண்டியதில்லை. அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கும்.தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத மருந்துகளை வாங்கிக் கொள்ளும் நடைமுறை தொடரும். அதே நேரத்தில், தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையுடன், சேவை கட்டணமாக, அதிகபட்சம் 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

தடுப்பூசிக்கு எதிராக பலர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒதுங்கியிருங்கள். தடுப்பூசி மட்டுமே, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கேடயம். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு உள்ளது. அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசிகள் அதிகளவில் கிடைக்க துவங்கும்.இதைத் தவிர, வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மூக்கின் வாயிலாக தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அது வெற்றிகரமாக அமைந்தால், தடுப்பூசி இயக்கத்தில் மிகப் பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை சந்திக்கலாம். குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்த ஆய்வும் வேகம் எடுத்துள்ளது.

தற்போது பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா இன்னும் முழுமையாக விரட்டப்படவில்லை. அதனால், சமூக இடைவெளி பின்பற்றுவது, முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அலட்சியமாக யாரும் இருந்து விடக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.


முதல்வர் வரவேற்புபிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:நாட்டில் தயாரிக்கப்படும் 75 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு கட்டணமின்றி வினியோகிக்கும் என்ற பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.மாநில அரசுகள் கோரியபடியே, தடுப்பூசி கொள்முதலில் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதையும் பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பாடம் கற்க வேண்டும்தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், அசாமில் ஆட்சியை தக்க வைத்த, பா.ஜ., புதுச்சேரியில் கூட்டணி அரசு அமைத்துள்ளது. ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்கத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ''தேர்தல்களில் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும், அதில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்,'' என, மோடி குறிப்பிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (15+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satheesh - singapore,சிங்கப்பூர்
08-ஜூன்-202121:45:39 IST Report Abuse
satheesh எல்லாம் Supreme court கொடுத்த மரண அடி . ஏதோ நல்லவன் மாதிரி வேஷம் போடுறதை பாரேன்.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
08-ஜூன்-202116:02:17 IST Report Abuse
ramesh புத்தருக்கு ஞானோதயம் இப்பொது தான் உண்டாகி இருக்கிறது
Rate this:
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. - தமிழா ஹிந்துக்களிடம் ஏமாறாதே ,இந்தியா
08-ஜூன்-202120:11:58 IST Report Abuse
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி.எல்லாம் chandrasuit கொடுத்த அழுத்தம் தான் இவர்களுக்கு சுயமா எது , 35000 கோடி ஒதுக்கி இருக்கியே என்ன செஞ்ச என்று தான் கேட்டார் பய புள்ள ஆடி இப்படி அறிவிப்பு...
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
08-ஜூன்-202115:01:26 IST Report Abuse
அறவோன் Thanks a zillion to the Union Supreme Court ⚖️🕍
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X