பொது செய்தி

இந்தியா

வைரசிலிருந்து மீள்வோரை தாக்கும் புதிய சரும தொற்று

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :தீவிர கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களுக்கு, தோலில், 'ஹெர்ப்ஸ்' எனப்படும் தொற்று, தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.டில்லி மற்றும் மும்பை நகரங்களில், தீவிர கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.பதற்றம்இது குறித்து, டில்லியில்
Skin Problem, Corona Virus, Covid 19, வைரஸ், மீண்டவர், புதிய சரும தொற்று

புதுடில்லி :தீவிர கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களுக்கு, தோலில், 'ஹெர்ப்ஸ்' எனப்படும் தொற்று, தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

டில்லி மற்றும் மும்பை நகரங்களில், தீவிர கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


பதற்றம்


இது குறித்து, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மஹாஜன் கூறியதாவது:தீவிர கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பலருக்கு, தோல் சம்பந்தப்பட்ட தொற்றுகள் ஏற்படுகின்றன. இதை, 'மியூகோர்மைகோசிஸ்' எனப்படும், கறுப்பு பூஞ்சை தொற்று என தவறாக நினைத்து, பலர் பதற்றத்துடன் வருகின்றனர்.தொற்றில் இருந்து மீண்ட பலருக்கு, 'ஹெர்ப்ஸ்' எனப்படும் ஒருவித தோல் தொற்று ஏற்படுகிறது.

சிலருக்கு, பல ஆண்டுகளுக்கு முன் ஹெர்ப்ஸ் தொற்று ஏற்பட்டு குணமாகி இருக்கும். அவை உடலிலேயே தங்கியிருக்கும். அது சிலருக்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.சிலருக்கு, முதல்முறையாக ஹெர்ப்ஸ் தொற்று ஏற்படுகிறது. இந்த தொற்று பாதிப்பு உருவானால், வாய் அல்லது பிறப்புறுப்பு பகுதியை சுற்றி புண்கள் ஏற்படும். எரிச்சல் அதிகம் இருக்கும்.


திட்டுதிட்டான பூஞ்சை


மேலும் சிலருக்கு, 'கேண்டிடா' என்ற பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் வெள்ளை நிறத்தில் திட்டுதிட்டான பூஞ்சை தொற்று காணப்படும். வழக்கத்தை விட அதிகமான முடி உதிர்தல், விரல் நகங்களில், வெள்ளை மற்றும் பிரவுன் நிற கோடுகள் உருவாவது போன்ற சரும பாதிப்புகள் பலருக்கு ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமான மருந்துகள், ஸ்டிராய்டு பயன்பாடு மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கடுமையாக குறைவது போன்ற காரணங்களால், இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIJAYAN S - மாங்காடு,இந்தியா
08-ஜூன்-202109:19:41 IST Report Abuse
VIJAYAN S நம் பாரம்பரிய மருத்துவமுறைக்கு மாறவேண்டும்.சித்தா ஆயுர்வேதம் நல்ல பலனளிக்கிறது.பக்கவிழைவும் கிடையாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
08-ஜூன்-202108:32:47 IST Report Abuse
blocked user சீன வைரஸ் பொதுமக்களை இந்தப்பாடு படுத்துகிறது. சீனா வல்லரசாகத் தொடர்வது உலகம் அழிவை நோக்கிச்செல்வதையே உறுதி செய்கிறது.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
08-ஜூன்-202107:43:42 IST Report Abuse
Darmavan இதை தடுக்க என்ன வழி வந்தால் போக்க என்ன வழி.
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
08-ஜூன்-202113:20:24 IST Report Abuse
Dr. SuriyaNo way for both cases...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X