எக்ஸ்குளுசிவ் செய்தி

அவசர தளர்வுகளால் அலைமோதும் கூட்டம் : தொற்று பரவல் தொடருமோ என அச்சம்

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
தமிழகத்தில் நேற்று அமலுக்கு வந்த தளர்வுகளால், மீண்டும் நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற அச்சம், அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, மே, 24 முதல், ஜூன், 7 வரை, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டது.மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான, காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் தடையின்றி கிடைக்க, தோட்டக்கலை துறை மற்றும்
அவசர தளர்வுகள்,  கூட்டம் , தொற்று தொடரும், அச்சம்

தமிழகத்தில் நேற்று அமலுக்கு வந்த தளர்வுகளால், மீண்டும் நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற அச்சம், அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, மே, 24 முதல், ஜூன், 7 வரை, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டது.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான, காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் தடையின்றி கிடைக்க, தோட்டக்கலை துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்தன.இந்த ஊரடங்கு காரணமாக, நோய் தொற்று பரவல் குறைய துவங்கியது. தினசரி, 35 ஆயிரத்துக்கு மேல் இருந்த, நோய் தொற்று பரவல் நேற்று, 20 ஆயிரத்துக்கு கீழ்குறைந்தது.


இது, ஒருவித நிம்மதியை கொடுத்த நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அவை, நேற்று முதல் அமலுக்கு வந்தன. அனைத்து மாவட்டங்களிலும், மளிகை, காய்கறிகள், பழக்கடைகள், காலை, 6:00 முதல், மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டன.அதேபோல, மீன் சந்தைகள், இறைச்சி கூடங்களில், மொத்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் அதிகம் உள்ள, 11 மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இதை பயன்படுத்தி, அந்த மாவட்டங்களில், அனைத்து வகையான கடைகளும், நேற்று திறக்கப்பட்டன. கொரோனா விதிமுறைகள் குறித்த கவலையின்றி, மக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், நோய் பரவல் அதிகரித்து விடுமோ என்ற, அச்சம் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து, மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறியதாவது:தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக, நோய் பரவல் குறைந்து வருகிறது. இன்னும் குறையும் வரை, அரசு காத்திருக்கலாம்.தளர்வுகளற்ற முழு ஊரடங்கை, 14ம் தேதி வரை, அரசு அமல்படுத்தி இருக்கலாம்.


தவறான முடிவுபொது மக்களுக்கு தேவையான மளிகை, காய்கறி, பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்த நிலையில், கடைகளை திறக்க அனுமதித்திருக்க தேவையில்லை.அப்படியே சிறு வியாபாரிகள் நலன் கருதி, கடைகளை திறக்க அனுமதிப்பதாக இருந்தாலும், காலை, 10:00 முதல், பகல், 12:00 மணி வரை மட்டும் அனுமதித்திருக்கலாம்.வேலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடைகள் மாலை வரை திறக்க அனுமதித்தது தேவையற்றது.கடைகள் திறக்கப்பட்டதால், வீடுகளில் முடங்கியிருந்த மக்கள், மீண்டும் பொருட்கள் வாங்க எனக்கூறி, சர்வ சாதாரணமாக நடமாடத் துவங்கி விட்டனர்.


சென்னையில், நேற்று முன்தினம் வரை கடைகளை, பாதி திறந்து வியாபாரம் செய்தவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மறுநாளே கடைகளை முழுமையாக திறக்க அனுமதித்தது, தவறான முடிவு.அதேபோல, வாகனங்களில் பயணிப்போரும் அதிகரித்து விட்டனர். தளர்வுகள் விஷயத்தில், அரசு அவசரப்பட்டு விட்டது. வரும், 14ம் தேதி வரை, கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.


அமலுக்கு வந்த தளர்வுகள்அரசு அறிவித்த தளர்வுகளின்படி, நேற்று மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறக்கப்பட்டன. நோய் பரவல் அதிகம் உள்ள, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த மாவட்டங்களில், மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர், இ- - பதிவுடன் பணிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.மின் பொருட்கள் விற்பனை கடைகள், 'ஹார்டுவேர்' கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை, கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.ஆனால், இம்மாவட்டங்களில், பேன்சி ஸ்டோர், டெய்லர் கடை என, அனைத்து விதமான கடைகளும், நேற்று திறக்கப்பட்டன.


இரு வார இடைவெளிக்கு பின், கடைகள் திறந்ததால், மக்கள் காலையிலே ஆர்வமுடன் சென்று, பொருட்களை வாங்கினர். அரசு அலுவலகங்களில், 30 சதவீதப் பணியாளர்கள், நேற்று பணிக்கு வந்தனர். கடந்த முறை, 50 சதவீதப் பணியாளர்கள் மட்டும் பணி செய்ய அனுமதிக்கப்பட்ட போது, எவ்வாறு சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என, அரசு தரப்பில் அறிவுறுத்தப் பட்டது. தற்போது, 30 சதவீத பணியாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ற, விபரம் தெரிவிக்கப் படவில்லை.எனவே, அலுவலகம் அருகிலிருந்த பணியாளர்கள், வழக்கம் போல் பணிக்கு வந்தனர். தொலைதுாரத்தில் இருப்பவர்கள் வரவில்லை. அத்தியாவசியப் பணிகளுக்கான துறைகளில், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
09-ஜூன்-202117:17:39 IST Report Abuse
ponssasi காலை ஆறு மணி முதல் பத்துமணி வரை சுமார் நான்கு மணி நேரம் மட்டும் தளர்வு அறிவித்திருக்கலாம், வாரா வாரம் என்று அறிவிக்காமல் ஒரு மாதம் என்று அறிவித்துவிடவேண்டும். இதனால் வெளியூர் செல்பவர்கள் e-பாஸ் பெற்று தனியார் வாகனத்தில் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டால் சென்னையில் இன்னும் பத்து முதல் இருபது லட்சம் பேர் சொந்த ஊர் செல்வார்கள். தவறான அணுகுமுறை, மக்களுக்கும் பொறுப்பு வரவில்லை.
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
08-ஜூன்-202115:47:49 IST Report Abuse
Nithya Ethanai pattalum indha makkalukku arivu kidayadhu...
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
08-ஜூன்-202114:33:12 IST Report Abuse
siriyaar வீடு வீடாக விவசாயிகளே டோர் டெலிவரி செஞ்சிட்டு இருக்காங்க வியாபாரிகள் இதனால் கடும் அதிருப்தி மக்களுக்கு வீட்டிலேயே கிடைக்குது, மேலும் குறைந்த விலைக்கு கிடைக்குது. இது தொடர்ந்தால் கடைகளுக்கு நாளடைவில் விவசாயிகளும் மக்களும் இந்த நடைமுறைக்கு மாறிவிட்டால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் மக்களுக்கு கம்மி விலைக்கு கிடைக்கும், இதனால் வியாபாரிகள் இல்லாமல் போய்விடுவார்கள், ,அக்கிரமராஜாக்கள் கடுமையாக பாதிக்கபடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X