தடுப்பூசி முகாமில் 'உபி'ஸ், நாட்டாமை... தடுக்காத போலீசால், 'தள்ளாடும்' கொடுமை!

Added : ஜூன் 07, 2021
Advertisement
''ஹாய்... அக்கா, எப்டி இருக்கீங்க?'' என மொபைல் போனில் நலம் விசாரித்த மித்ரா, ''என்னக்கா… திரும்பவும் 'லாக்டவுன்' நீட்டிக்கிறாங்களாமே,'' என, புலம்ப, ''என்ன மித்து பண்றது. நம்ம ஊர்ல 'லாக்டவுன்' மாதிரியா இருந்துச்சு,''''தடுப்பூசி போடறதுல இருந்து, நடமாடும் கடைகளுக்கு அனுமதி கொடுக்கிறது வரை, எல்லாத்துலயும் குழப்பம் தான்; 'சிஸ்டம் சரியில்லை'ன்னு சொல்ற
 தடுப்பூசி முகாமில் 'உபி'ஸ், நாட்டாமை... தடுக்காத போலீசால், 'தள்ளாடும்' கொடுமை!

''ஹாய்... அக்கா, எப்டி இருக்கீங்க?'' என மொபைல் போனில் நலம் விசாரித்த மித்ரா, ''என்னக்கா… திரும்பவும் 'லாக்டவுன்' நீட்டிக்கிறாங்களாமே,'' என, புலம்ப, ''என்ன மித்து பண்றது. நம்ம ஊர்ல 'லாக்டவுன்' மாதிரியா இருந்துச்சு,''''தடுப்பூசி போடறதுல இருந்து, நடமாடும் கடைகளுக்கு அனுமதி கொடுக்கிறது வரை, எல்லாத்துலயும் குழப்பம் தான்; 'சிஸ்டம் சரியில்லை'ன்னு சொல்ற அளவுக்கு தானே பல இடங்கள்ல தினமும் ஏதாவது ஒரு கூத்து நடந்துகிட்டு இருக்குது,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.''ஏங்க்கா, அப்படி என்ன தான் நடக்குது; விவரமாத்தான் சொல்லுங்களேன்,''''கடந்த வாரத்தில, விதிமுறை மீறி செயல்பட்ட பனியன் கம்பெனிகளுக்கு, ஆபீசர்ஸ் ரெய்டு பண்ணப்போற விஷயம் உடனே தெரிஞ்சிருச்சாம். உடனே, ஆளுங்கட்சி லோக்கல் வி.ஐ.பி.,ங்க, 'விடுங்க, பாத்துக்கலாம்' என, ஆபீசர்ங்களை 'சைலன்ட்' ஆக்கிட்டாங்க...''''கட்சிக்காரர்களின் 'பிரஷர்' தாங்காம, தாசில்தார்ங்க தங்ளோட மொபைல் போனை 'நாட் ரீச்சபிள்' ஆக்கி வைக்கும் அளவுக்கு, தொந்தரவு கொடுத்திருக்காங்கன்னா பாத்துக்க,'' என்றாள் சித்ரா.''தடுப்பூசியெல்லாம், சரியா கிடைக்குதாங்க்கா,'' என, 'கோவிட்' பக்கம் பேச்சை மாற்றினாள் மித்ரா.''அதை ஏண்டி கேக்குற… தடுப்பூசி முகாம் எங்க நடக்குது, எத்தனை பேருக்கு ஊசிப்போட போறாங்கங்கற விஷயம் கடைசி வரைக்கும் 'சஸ்பென்ஸ்'தான். தடுப்பூசி போட மக்கள் கூட்டம், கூட்டமா வர்றாங்க. அவங்களே தொற்றுபரவ காரணமாகிடுவாங்களோன்னு, 'ெஹல்த் டிப்பார்ட்'மென்ட்காரங்க பயப்படறாங்க,''''இவ்வளவு ஏன்? ராப்பகலா, 'வார் ரூம்'ல வேலை செய்றவங்களுக்கே தடுப்பூசி கிடைக்கலையாம். முகாம் நடக்கிற இடத்தை தேடி கண்டுபிடிச்சு ஊசி போட்டுட்டு வந்திருக்காங்க. ரேஷன் பணியாளருங்க நிலைமை இதைவிட மோசம்,''''உண்மைதாங்க்கா...'' என்ற மித்ரா, ''அவிநாசியில் நடந்த நிகழ்ச்சியில கூட, 'தடுப்பூசிக்கு' டோக்கன் சிஸ்டத்தை 'பாலோ' பண்ணுங்க,'னு மினிஸ்டர் அட்வைஸ் பண்ணினாரு. ஆனா, யாரு கேக்கறாங்க. பல இடங்கள்ல 'கேர் சென்டர்' திறப்பு விழாவுக்கு மினிஸ்டர் போறப்ப, ஏகப்பட்ட கட்சிக்காரங்க வர்றாங்க. பல பேரு 'மாஸ்க்' போடறது இல்ல; சமூக இடைவெளியும் 'மெயின்டெயின்' பண்றது இல்ல,''''மக்களா பாத்து பாதுகாப்பாக இருந்தாதான் ஆச்சு. இந்த ெஹல்த் டிபார்ட்மென்ட்ல கட்சிக்காரங்க 'டாமினேஷன்' ரொம்ப அதிகமாகிடுச்சுன்னு பேசிக்கிறாங்க்கா...'' என்றாள் மித்ரா.''மித்து, இது என்னடி. புதுசா இருக்கு; கொஞ்சம் புரியும்படியா சொல்லு''''ஜி.எச்.,சில், கொரோனா சிகிச்சை விவகாரத்த கண்காணிக்க, சூரியக்கட்சில இருந்து ஒரு நிர்வாகிய நியமிச்சு இருக்காங்களாம். ஏதோ, வானாளாவிய அதிகாரம் கிடைச்ச மாதிரி, அவரு, 'டீன்' ரூமுக்கு சர்வ சாதாரணமா போயிட்டு, வந்துட்டு இருக்காராம்,''''தடுப்பூசி முகாம் நடக்கிற இடத்துக்கு போயி, 'டோக்கனை' மொத்தமா வாங்கிட்டு வந்து, வேண்டப்பட்ட ஆட்களுக்கு கொடுத்து, ஊசி போட வைக்கிறாராம். நர்ஸ், கம்பவுண்டர், ஆம்புலன்ஸ்னு, கொரோனாவை குத்தகைக்கு எடுத்துட்ட மாதிரி, அலப்பறை பண்றாராம். இதேமாதிரி தான், எல்லா தடுப்பூசி முகாம் நடக்கற இடத்தில, அந்தந்த ஏரியா கட்சிக்காரங்க, நாட்டாமை பண்றாங்களாம்...''''தடுப்பூசியிலும் அரசியல் பண்ண நினைக்கற இவங்களை என்னன்னு சொல்ல,'' சொன்ன சித்ரா, ''பல்லடத்திலும், இதே விஷயத்தில், 'கோல்மால்' நடக்குதாம்,'' என புதிர் போட்டாள்.''அது என்னங்க்கா...''"பஞ்சாயத்துல, தலைவர்ங்க பொறுப்புல தடுப்பூசி போடறதால, எங்களால சரியான முறைல வேல செய்ய முடியலைன்னு 'ஹெல்த் டிபார்ட்மென்ட்' ஸ்டாப்ஸ் புலம்பறாங்க. பல பஞ்சாயத்தில, ஊராட்சி தலைவருங்க 'அட்வான்ஸா' டோக்கன் வாங்கி வச்சுகிட்டு, வேண்டப்பட்டவங்களுக்கு மட்டும் தர்றாங்களாம்டி,''''இப்படியே போனா, மக்கள்கிட்ட கெட்ட பேரை சம்பாதிக்க வேண்டியதுதான்,'' கடுப்பாக சொன்ன மித்ரா, ''சிட்டி கமிஷனர் மற்றும் எஸ்.பி.,யை மாத்திட்டாங்க. புது ஆபீசர்ஸ் பொறுப்பு எடுத்துட்டாங்க. இதனால, கரெப்ஷன், கட்டப்பஞ்சாயத்து ஆபீசர்ங்க, கலங்கிப்போய் இருக்காங்களாம்,'' என, போலீஸ் மேட்டருக்கு தாவினாள்.''அந்தளவுக்கு நல்ல ஆபீசர்களா...?''''கரூர்ல இருந்து வந்துள்ள எஸ்.பி., ரொம்ப கறாரானவராம். இல்லீகல், கட்டப்பஞ்சாயத்து, 'பொலிடிக்கல் இன்புளுயன்ஸ்' சமாச்சாரங்கள, ஏத்துக்கவே மாட்டாராம்,''''அட, பரவாயில்லயே. இந்த மாதிரி ஆபீசருங்க வந்தாதான் 'டாலர் சிட்டி'க்கு நல்லது. இங்க தான், ஏகப்பட்ட இல்லீகல் விஷயம் நடக்குதே. அதுக்கு, லோக்கல் ஸ்டேஷன் ஆபீசர்ங்க, போலீஸ்காரங்க பல பேரு துணையா இருக்காங்க. கண்டுபிடிச்சு, தொடர்புள்ளவர்களை களையெடுத்தார்ன்னா, ரொம்ப நல்லா இருக்கும்,''''இதெல்லாம் சரியா நடக்கோணும்னா, ஒற்றர்படை நேர்மையா இருக்கோணும். ஒவ்வொரு ஸ்டேஷன்ல நடக்கிற, கட்டப்பஞ்சாயத்து, டீலிங், ஆபீசர்கள் முதுகை வளைக்கிற போக்கை, சரியா சொன்னாங்கன்னா, அவரும் 'ஆக்ஷன்' எடுப்பாரு,'' என்றாள் மித்ரா.''கரெக்டா சொன்ன மித்து. ரொம்ப சரியா கணிச்சிருக்க. அப்படின்னா கூடிய சீக்கிரம், ஒற்றர் படையிலும் களையெடுப்பு இருக்கும்ன்னு சொல்ற, அப்படித்தானே…'' என்ற சித்ரா ''மங்கலத்துல, ஒரு கொலையை, தற்கொலைன்னு மூடி மறைச்சு 'கேஸ்' போட்ட விவகாரத்துல, ஊட்டிக்கு துாக்கியடிக்கப்பட்ட போலீஸ் ஆபீசரு, மினிஸ்டருக்கு பி.எஸ்.ஓ.,வா, வந்துட்டாருன்னு, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பேசினோமில்ல,''''இத கேள்விப்பட்ட 'சாமி' மினிஸ்டர், 'ஷாக்' ஆகி, பி.எஸ்.ஓ.,வை டிரான்ஸ்பர் பண்ணிட்டு, சொந்த ஊர் ஸ்டேஷன்ல வேல பாக்குற ஒருத்தர, அப்பாயின்ட் பண்ணிட்டாரு,'' சிரித்து கொண்டே சொன்னாள் சித்ரா.''அக்கா, இதே மாதிரி தான், உடுமலை சப்-டிவிஷன்ல ஒரு ஸ்டேஷன் ஆபீசரு, லேடி போலீஸ்காரங்ககிட்ட நடந்துகிட்ட விதம் சரியில்லைன்னு பேசினோம்ல. அத பத்தி, 'என்கொயரி' நடக்குதாம்,''''ஏதோ, நல்லது நடந்தா சரி தான்டி... மித்து, என்ன தான் பெரிய ஆபீசருங்க 'ஸ்டிரிக்ட்டா' இருந்தாலும், 'லாக்டவுன்'லேயும், கல்லா கட்றதுல சில காக்கிச்சட்டைக்காரங்க கவனம் சிதறாம இருக்காங்க,'' என்று மீண்டும் போலீஸ் குறித்து பேசினாள்.''இது, எங்கக்கா...''''பல்லடத்தில் தான். திறந்திருக்கற கடைகள 'வாட்ச்' பண்ணி, 15 ஆயிரம் ரூபா வரைக்கும், போலீஸ்காரங்க சிலரு 'மாமூல்' வாங்கிட்டாங்கன்னு, வியாபாரிங்க புலம்பறாங்க... இதேமாதிரி தான், சிட்டில, குமார்நகர் பகுதியில் திறந்திருந்த 'கேக் ஷாப்'புக்கு போன போலீஸ்காரங்க, 'கார்ப்பரேஷன்காரங்க வந்தா, 'ெஹவியா பைன்' போட்டுடுவாங்கன்னு சொல்லி, ஒரு 'அமவுன்ட்டை' வாங்கிட்டு, கமுக்கமா வந்துட்டாங்களாம்,''''எந்த 'லாக்-டவுன்' வந்தாலும், இவங்க வேலைய கரெக்டா பாப்பாங்கக்கா... அக்கா, காங்கயத்தில, ராப்பகலா, ஆம்புலன்ஸ் டிரைவருங்க உயிர் காக்கும் வேலையில மும்முரமா இருக்காங்க. இடையிடையே கிடைக்கிற டைம்ல டிபன் சாப்பிட, பைக்கில் போனா, எஸ்.ஐ., ஒருத்தர், அவங்கள மடக்கி, 'பைன்' போடறது, டூவீலர பறிமுதல் பண்றதுன்னு, கெடுபிடி பண்ணிட்டு இருந்தாராம்,''''நொந்து போன சில டிரைவர்ங்க, பெரிய ஆபீசர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. அவரும் கூப்பிட்டு, நல்லா வெளுத்துட்டாராம். இதனால, அந்த 'சத்ய'மான ஆபீசரு 'சைலன்ட்' ஆயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''மித்து, அவிநாசி சப்-டிவிஷனில், பல இடங்களில், கள்ள மார்க்கெட்டில், 'சரக்கு' விற்பனை அமோகமாம். அதிலும், ஒரு 'குவார்ட்டர்' 800 லிருந்து, ஆயிரம் ரூவா வரைக்கும் விக்கறாங்க. அதிலும், இப்படி வித்த தெக்கலுார் - செங்காளிபாளையத்தில் ஒரு தோட்டத்தில, ரெய்டு போன போலீசை அடிச்சிட்டாங்க...''''அச்சச்சோ... அப்புறம் என்னாச்சுக்கா?''''இதனால, கொந்தளிச்ச போலீசார், நாலு பேரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இத்தனைக்கும், 'லாக்-டவுன்' போட்ட காலத்திலிருந்து, ஒரு 'குவார்ட்டர்' 800 ரூபாய்க்கு வித்தாங்களாம்,''''உள்ளூர் போலீசுக்கு, இந்த விஷயம் நல்லா தெரிஞ்சும் கூட, கண்டுக்க கூடாதுன்னு, 'பாஸ்' வாய்மொழி உத்தரவாம். இப்ப பிரச்னை முற்றியதும், வேறு வழியில்லா, ஆறு செக் ஷனில், கேஸ் போட்டிருக்காங்க...''''அதே ஊரில், இன்னும் நாலஞ்சு பேர் பாட்டில் விக்கறாங்க. அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கோணும்னு, உள்ளூர் மக்கள், பெட்டிஷன் ரெடி பண்ணிட்டு இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, ''ஓ.கே., மித்து, 'சார்ஜ்' முடியப்போகுது. நாளைக்கு கூப்பிடறேன்,'' என மொபைல் போன் இணைப்பை துண்டித்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X