அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும்

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 07, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை :'தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்கி, உடனே சட்டம் இயற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின், 30 ஆண்டு கால கனவு. இக்கனவு மட்டும் கைக்கெட்டாமல், தொடுவானம் போல விலகிச் செல்கிறது. தமிழை பயிற்று மொழியாக்க, எந்த அரசும் முழுமனதுடன்,
தமிழ் வழி கல்வி ,கட்டாயம் , சட்டம்,  வேண்டும்

சென்னை :'தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்கி, உடனே சட்டம் இயற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின், 30 ஆண்டு கால கனவு. இக்கனவு மட்டும் கைக்கெட்டாமல், தொடுவானம் போல விலகிச் செல்கிறது.
தமிழை பயிற்று மொழியாக்க, எந்த அரசும் முழுமனதுடன், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.தமிழை கட்டாய பயிற்று மொழியாக்கும் சட்டம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதையும், தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு சட்டமான, கல்வி பெறும் உரிமை சட்டத்தின், 29 - எப் பிரிவில், நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில், தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த வாசகத்தில், நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் என்பதை மட்டும் நீக்கி, கல்வி பெறும் உரிமை சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து, அதற்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும். இந்த சட்ட திருத்தத்தையும், தமிழை பள்ளி இறுதி வகுப்பு வரை, படிப்படியாக கட்டாய பயிற்று மொழியாக்கும் சட்டத்தையும், சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில், தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
09-ஜூன்-202107:24:49 IST Report Abuse
Darmavan ஜப்பானிலும் சீனாவிலும் நாடு பூராவும் ஒரே மொழி .அங்கு மொழியை அந்த அளவுக்கு வளர்த்த பிறகு செய்கிறார்கள்.இங்கு எப்படி.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
09-ஜூன்-202107:20:34 IST Report Abuse
Darmavan இவனெல்லாம் பிரிவினைவாதிகள்,நாட்டு ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள்.தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தமிழில் அதனை சொற்கள் பெயர்கள் இருக்கிறதா .தமிழில் நடத்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
08-ஜூன்-202118:34:05 IST Report Abuse
S. Narayanan இவர் மகன் மகள் மற்றும் பேரன் பேத்தி எல்லோரும் உடனே தமிழ் வழி கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். மகன் மகளுக்கு 45 வயதுக்கு மேல் இருந்தாலும் தமிழ் வழியில் படித்து முடித்தால் தான் இப்போது இருக்கும் வேலையை தொடரமுடியு.அது வரை சம்பளம் எதுவும் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X