கொரோனா உலகில் தோன்றி இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல் அலையில் சுமார் 8.3 கோடி பேர்களைத் தாக்கி, சுமார் 15 லட்சம் உயிர்களைப் பறித்தது. முதல் அலை முடியும் முன்னரே இரண்டாம் அலை உருவாகி, முதல் அலையில் ஒரு வருடத்தில் ஆன சேதங்களை வெறும் ஐந்தே மாதங்களில் விளைவித்தது. மொத்தத்தில் இதுவரை உலக அளவில் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டு 35 லட்சம் பேர் உயிரிழந்துஉள்ளனர்.ஒவ்வொரு நாட்டிலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி மரபணு மாற்றம் அடைந்த இந்த வைரஸ், மாறுபட்ட குணங்களோடு, மாறுபட்ட முறையில் சேதங்களை விளைவிக்கின்றது.
முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் சில பொதுவான வித்தியாசங்கள் தெரிகின்றன.
1. இந்த அலையில் வைரஸ் மிக எளிதாகவும், மிக வேகமாகவும் பரவுகிறது.
2. இள வயதினரை அதிகம் தாக்குகிறது. குழந்தைகளையும் குறி வைக்கிறது.
3.கிராமங்களுக்குள்ளும் பரவுகிறது.
4. காய்ச்சல், தொண்டை வலி, இருமலுக்குப் பதில் திடீர் மூச்சுத்திணறல் தற்போது அதிகம். ஆக்சிஜன் தேவையும் முதல் அலையை விட மிக அதிகம்.
5. நிறையபேர் தற்போது இறந்திருப்பது உண்மைதான். ஆனால் இறப்புவிகிதம் இரண்டாம் அலையில் குறைவு. முதல் அலையில் 1.3 சதவீதத்தில் இருந்தது 0.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நம் நாட்டில்...
பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் அப்படி ஒன்றும் பாதிப்பு அதிகம் இல்லை. இந்தியாவை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த மேலை நாட்டினரும், வெளிநாட்டு ஊடகங்களும், இந்தியா ஒரே பிணக்காடாக மாறிவிட்டதாகக் கதை கட்டி வருகிறார்கள்.ஒரு சிறு உதாரணம்: நம் மக்கள்தொகை 138 கோடி. அமெரிக்காவின் மக்கள்தொகை 33 கோடி. நம் கொரோனா எண்ணிக்கை 2.7 கோடி. இறந்தவர்கள் 3.2 லட்சம். அமெரிக்காவில் கொரோனா எண்ணிக்கை 3.3 கோடி. இறப்பு 6 லட்சம். இதேபோல் பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், அர்ஜென்டினா, மெக்ஸிகோ, பெரு, சிலி, சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், கனடா, அரபு நாடுகள், கொலம்பியா இத்தனை நாடுகளின் கூட்டு மக்கள்தொகை சுமார் 142 கோடி. இத்தனை நாடுகளையும் நம் நாட்டுக்குள் ஒட்டுமொத்தமாக அடைத்து வைத்தால் சரியாக இருக்கும். இத்தனை நாடுகளின் கூட்டு பாதிப்பு 11.7 கோடி.கூட்டு இறப்பு 23 லட்சம். இதில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் 60% மேல் தடுப்பு ஊசி செலுத்தியதாக பெருமை கொள்கிறார்கள். ஆனாலும் அமெரிக்காவில் இன்றும் தினம் 30,000 பாதிப்புகளும் பிரேசிலில் தினம் 60 ஆயிரம் பாதிப்புகளும் பதிவாகி வருகின்றன.
இயற்கையாகவே எதிர்ப்புசக்தி
நாம் வெறும் 12% தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம். நமக்கு இயற்கையாகவே எதிர்ப்புசக்தி நிறைய இருக்கிறது என்பதால் பாதிப்பு குறைவு. சர்வதேச ஊடகங்கள் நம்மை புழுதி வாரித் துாற்றுவது போதாதென்று நம்முடைய ஊடகங்களும் இந்த இரண்டாம் அலையைப் பூதாகரமாக்கி பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. யாரும் பீதியடைய வேண்டாம்; ஆனால் எச்சரிக்கை அவசியம். தடுப்பு ஊசிகள் வந்துவிட்டன. இன்னும் பயனுள்ள, இன்னமும் பாதுகாப்பான தடுப்பு ஊசிகள் விரைவில் வர இருக்கின்றன. நம் நாட்டில் இந்த அலை தணிய ஆரம்பித்துவிட்டது. இந்த அலை ஏறிய வேகத்தில் இறங்கிவிடும் என்று ஐ.ஐ.டி முதலிய பல்வேறு நிபுணர்களும் கூறிவருகிறார்கள். வெகுவிரைவில் நாம் இந்த வைரசை வெற்றி கொள்வோம்.பூஞ்சைத் தொற்றுபூஞ்சைத் தொற்று என்று இன்னொரு பூதம் கிளம்பி இருக்கிறது. இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவது இல்லை. இது முற்றிலும் குணமாக்ககூடியது. கிணறுகள், குளங்களில் தண்ணீரில் பச்சையாய்ப் படர்ந்து இருக்குமே, அதுதான் பூஞ்சைக்காளான். இதுவே மனித உடலில் கருப்பு நிறத்தில் 'மியூகார்மைகோசிஸ்' (Mucormycosis) என்ற பூஞ்சையாக பரவுகிறது. தாவர இனத்தைச் சேர்ந்த இது மனிதர்களுக்கு முக்கியமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள்...
1.சர்க்கரைநோய்
2.ஸ்டீராய்டு வகை மருந்துகள் நீண்ட நாள் எடுத்து வருபவர்கள்.
3. புற்றுநோய், மற்றும் கொரோனா மருந்துகள் எடுத்து வருபவர்கள்.
4. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து கொடுப்பதற்குப் பயன்படுத்திவரும் ஈரப்பதமான முகக் கவசங்கள்.
5. ஒரே முகக்கவசத்தை திரும்ப திரும்ப பயன்படுத்துவது.முதல் அலையின் போதும் இதே சர்க்கரைநோய், இதே ஸ்டீராய்டு தான் இருந்தன. ஆனால் அப்போது பூஞ்சை தொற்று கிடையாது ஏன் அப்போது கொரோனா வைரஸ் கொல்லியாக பழைய மலேரியா மாத்திரை ைஹட்ராக்சி க்ளோரோக்வின் (HCQS) பல இடங்களில் பயன்படுத்தப்பட்டது. இது நல்ல வைரஸ் கொல்லியாக மட்டுமின்றி, பாக்டீரியா, பூஞ்சை என அத்தனை கிருமிகளையும் கொல்லும் சக்தி கொண்டது. ஆகவே அப்போது பூஞ்சை யாருக்கும் வரவில்லை.பிறகு நடந்த கதை தான் தெரியுமே. 5 ரூபாய் செலவில் குணமாக்கும் HCQS மருந்து, ரெம்டெசிவீருக்கு தடையாக இருப்பதாக நினைத்த பலமிக்க பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், அது இதயத்தை பாதிக்கும் என்று கதை கட்டி, தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் உலக சுகாதார நிறுவனம் மூலம் தடைவிதித்தது. தற்போது உலக சுகாதார நிறுவனம் ரெம்டெசிவீர் பெரிய அளவில் பயனில்லாத மருந்து என்று அறிவித்திருக்கிறது. HCQS நல்ல தடுப்பு மருந்தும் கூட. அண்மையில் சிங்கப்பூர் தேசிய பல்கலை மருத்துவமனை வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்த மாத்திரை எடுத்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா வரவில்லை என்று கூறப்பட்டது.
பாதுகாப்பான மருந்துகள்
சில குடல் புழுக்கள், சொறிசிரங்கு உண்ணியை அழிக்கப் பயன்படும் மருந்து ஐவர்மெக்டின். இது கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது. இதை நோயாளிக்கு கொடுத்து வருகிறோம். இந்த மருந்தின் மூலம் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். 60 ஆயிரம் ரூபாய்க்கு ஊசி என்றெல்லாம் புது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் வேளையில் 10 ரூபாய் மாத்திரையை பன்னாட்டு நிறுவனங்கள் பொறுத்துக் கொள்ளுமா.உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அவசரமாக அறிக்கை விட்டது, ஐவர்மெக்டின் பாதுகாப்பானது அல்ல " என்று.உங்கள் டாக்டர்களை ஆலோசித்து அவர்கள் அனுமதியுடன் HCQS மாத்திரையோ, ஐவர் மெட்டின் மாத்திரையையோ எடுத்து வந்தால், இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.இந்த அலை விரைவில் முடிவுக்கு வரும்; மீண்டும் வரலாம்! தடுப்பூசி செலுத்தி, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நாம் எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் இருந்தால் எந்த அலைகளையும் சமாளிக்க முடியும்.-டாக்டர். ப. சவுந்தர பாண்டியன்சிறுநீரகவியல் நிபுணர்மதுரை. 94433 82830
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE