வீட்டில் இருந்தால் திட்டுறாங்க... தடுக்காத போலீசால், ‛தள்ளாடும்' கொடுமை!

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021
Share
Advertisement
கோவை கார்ப்பரேஷன் ஆபீஸில், மினிஸ்டர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவ்வழியாக, சித்ராவும், மித்ராவும் சென்றபோது, கூட்டம் கூட்டமாக கட்சியினர் திரண்டு நின்றிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, கொரோனா தொற்று பரவிட்டு இருக்கு. சமூக இடைவெளி விட்டு நிக்கணும்னு சொல்றாங்க. ஆனா, கட்சிக்காரங்களே கூட்டமா கூட்டமா இருக்காங்களே. யாரும் எதுவும்
 வீட்டில் இருந்தால் திட்டுறாங்க... தடுக்காத போலீசால்,  ‛தள்ளாடும்' கொடுமை!

கோவை கார்ப்பரேஷன் ஆபீஸில், மினிஸ்டர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவ்வழியாக, சித்ராவும், மித்ராவும் சென்றபோது, கூட்டம் கூட்டமாக கட்சியினர் திரண்டு நின்றிருந்தனர்.

அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, கொரோனா தொற்று பரவிட்டு இருக்கு. சமூக இடைவெளி விட்டு நிக்கணும்னு சொல்றாங்க. ஆனா, கட்சிக்காரங்களே கூட்டமா கூட்டமா இருக்காங்களே. யாரும் எதுவும் சொல்லலையே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''மித்து, சத்தமா பேசிடாதே! இப்படித்தான், வடவள்ளி, பி.என்.புதுார்ல கட்சி நிர்வாகி ஒருத்தரு முகக்கவசம் இல்லாம நின்னுக்கிட்டு இருந்தாரு. அதை தட்டிக்கேட்ட கார்ப்பரேஷன் உதவி பொறியாளரையும், சுகாதார பணியாளரையும் கட்சிக்காரங்க தாக்கிட்டாங்க,''

''ஸ்டேஷனுக்கு 'கம்ப்ளைன்ட்' கொடுக்கப் போனாங்க. ஆளுங்கட்சிக்காரங்க மேல கேஸ் பதியறதுக்கு யோசிச்ச போலீஸ்காரங்க, கட்டப்பஞ்சாயத்து பேசி, புகார் கொடுக்க விடாம தடுத்துட்டாங்க. அதனால, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பலரும் மன வேதனையில இருக்காங்க,''

''கொரோனா பரவாம தடுக்காம, ராப்பகலா வேலை பார்க்குறாங்க. அவுங்களையே கட்சிக்காரங்க இப்படிச் செஞ்சா, மக்கள் என்ன நினைப்பாங்க,'' என்ற சித்ரா,

''அதே கட்சிக்காரரு, போனவாரம், சாயிபாபா காலனி போலீஸ் ஒருத்தரை அடிக்கப் போயிருக்காரு. இவர்ட்ட, எலக்சன் டைம்ல அஞ்சரை லட்சம் ரூபாய் பறிமுதல் பண்ணுனாங்களாம்,''

''மித்து, நம்மூருக்கு எந்த மினிஸ்டர் வந்தாலும், தி.மு.க., மாஜி ஒருத்தரு ஒட்டிக்கிறாராம். மத்த நிர்வாகிகளை நெருங்க விடுறதில்லையாம். தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ள கட்சி இருக்கற மாதிரி நடந்துக்கிறாராம். ஆனா, 10 தொகுதியில அதிக ஓட்டு வித்தியாசத்துல தோத்தவருன்னு, உடன்பிறப்புகள் சொல்லிக்கிட்டு இருக்காங்க,''

''அக்கா, இப்ப கொஞ்ச நாளாவே, தி.மு.க., கட்சிக்காரங்க, தேவையில்லாம வம்பு இழுக்கற வேலையை ஆரம்பிச்சிட்டாங்களே,''
''யெஸ், நீ சொல்றது கரெக்ட்டுதான்! கோவையில இருக்குற அ.தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரையும் வச்சு, 'தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு! கோவை மாவட்ட எம்.எல்.ஏ.,க்களைப் போல'ன்னு, பத்துப் பேரோட படத்தைப் போட்டு, தி.மு.க.,காரங்க மீம்ஸ் போட்டாங்க. அவுங்க களத்துல இறங்கி, வேலை பார்த்தா, அதை செய்ய விடாம தி.மு.க.,காரங்க தடுக்குறாங்க. இதெல்லாம் முதல்வருக்குஉளவுத்துறை ரிப்போர்ட் போட்டால் நல்லது,''கார்ப்பரேஷன் ஆபீஸ் வளாகத்தில் நின்றிருந்த போலீசாரை பார்த்த மித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும். சாய்பாபா காலனி போலீஸ்காரங்க டெய்லி மாமூல் ரூ.2,000 வசூலிக்கிறாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாப்பா, உண்மைதான்! கோவில்மேடு ஏரியாவுல, செக்போஸ்ட்டை தாண்டியதும், ஒரு 'டாஸ்மாக்' கடை இருக்கு; துடியலுார் லிமிட்டுக்குள்ள வரும். ஆனா, சாய்பாபா காலனி போலீஸ்காரரு, பார் ஏலம் எடுத்தவரை மிரட்டி, தன்னுடைய வீட்டுக்கு ஒரு லோடு செங்கல் அனுப்பச் சொல்லியிருக்காரு.3,000 செங்கல், 48 ஆயிரம் ரூபாய்ன்னு சொன்னதுனால, என்னால முடியாதுன்னு கடைக்காரரு சொன்னாராம். உடனே, கடையில இருந்து திருட்டுத்தனமா சரக்கு விக்கிறதுக்கு, தெனமும் ரூ.2,000 மாமூல் கொடுக்கணும்னு, 'ரேட்' பிக்ஸ் பண்ணிட்டாராம்,''

''அதனால, சரக்கு விலையை எக்குத்தப்பா உயர்த்திட்டாங்களாம். ஒரு பீர் ரூ.300, ஒரு குவார்ட்டர் ரூ.500, ஒரு புல் ரூ.5,000க்கு விக்கிறாங்களாம். கரெக்ட்டா மாமூல் கொடுக்கறதுனால, போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லையாம்,''

''இதேமாதிரி, ரூரல் லிமிட்டுல தொண்டாமுத்துார், பேரூர், ஆலாந்துறையிலும் இல்லீகலா மது விற்பனை ஜோரா நடக்குதாம்,''பேசிக் கொண்டே நடந்து சென்ற சித்ரா, அமைச்சரின் கார் நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்த, கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை பார்த்து,

''என்னப்பா, தொற்று பரவல் குறைஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க. உண்மைதானா, சும்மா சொல்றாங்களா,'' என, கிளறினாள்.''கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருதாம். உயிரிழப்பு மட்டும் இன்னும் குறைஞ்சபாடில்லை. தினமும், 70-80 பேர் பலியாகிடுறாங்களாம். ராத்திரி 10:00 மணி வரைக்கும் கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் 'வெயிட்' பண்ணி, சவக்கிடங்குல இருக்குற எல்லா சடலத்தையும் அனுப்பினாலும், விடிஞ்சா,பலசடலம் இருக்குதாம். கவர்மென்ட் ஆஸ்பத்திரியில என்னதான் நடக்குதுன்னு தெரியலை,''

''நைட் நேரத்துல கலெக்டரே, கொரோனா வார்டுக்கு வெளியே, சேர் போட்டு உட்கார்ந்திருந்தாரே,''

''ஆமாப்பா, ஜி.எச்., நிர்வாகம் தரப்புல, டிரீட்மென்ட்நல்லாகொடுக்குறதா சொல்றாங்க.இதெல்லாம் உண்மைதானான்னு நேரடியா தெரிஞ்சிக்கிறதுக்காக, கலெக்டர் வந்திருந்தாராம்,''

''இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியில, இதை விட கொடுமை அதிகமா நடக்குதாம்,''

''என்னக்கா, சொல்றீங்க...''''மித்து, அந்த ஆஸ்பத்திரியில லிப்ட் செயல்படுறதில்ல. மூணாவது மாடியில இருக்கற நோயாளிகளை, ஸ்ட்ரெக்சர் வச்சு துாக்கிட்டு வர்றதுக்குள்ள, ஊழியர்கள் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. யாராவது இறந்துட்டா, சடலத்தை எடுக்குறதுக்கு, அஞ்சு மணி நேரமாகுதாம்,''

''சரியான நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கறதில்லை. குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யலையாம். ஒவ்வொரு பேஷன்ட்டும் கடையில இருந்து, அஞ்சு லிட்டர் கேன் வாங்கி, தாகத்தை தணிக்கிறாங்களாம்,''

''டிரீட்மென்ட் எப்படி இருக்காம்,''

''டாக்டர்கள் யாரும் எட்டிப்பார்க்கறதே இல்லையாம். நர்ஸ்தான் எல்லாமே. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் மருந்து கொடுக்கிறாங்களாம்; ஆனா, நோயாளிக்கு ஊசி போட்ட மாதிரியும், மாத்திரை கொடுத்த மாதிரியும், கேஸ் ஷீட் மட்டும் ரெடி பண்ணி வச்சிருக்காங்களாம்,''என்றபடி, மாநகராட்சி வளாகத்துக்குள் நடந்து வந்தாள் சித்ரா.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சரின் வாகனத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, ரேஷன் கடைக்காரங்க ரொம்பவே நொந்து போயிருக்காங்க. இன்னும், 14 வகையான மளிகை தொகுப்பு கடைக்கு வரலையாம். மத்திய அரசு அரிசியும் கொடுக்கலையாம்.இந்த மாசத்துக்கான வழக்கமான பொருள் ஒதுக்கீடும் வந்து சேரலையாம். ஆனா, டோக்கன் மட்டும் கொடுக்கச் சொல்லி, உத்தரவு வந்துட்டே இருக்கு. பொருள் கேட்டு மக்கள் திரண்டு வந்தா என்ன பதில் சொல்றதுன்னு, கடைக்காரங்க தவிச்சிட்டு இருக்காங்க,''

''கொரோனா தொற்றுக்கு, ரேஷன் கடை ஊழியர்களும் இறந்துட்டதா கேள்விப்பட்டேனே,''

''ஆமாப்பா, இதுவரைக்கும், 6 ஊழியர்கள் இறந்துட்டாங்க. ஒரு பேரூராட்சி செயல் அலுவலர், ஒரு பி.டி.ஓ., இறந்துட்டாங்க. இதைப்பத்தியெல்லாம்,அரசுக்கு உளவுத்துறையினர் தெரிவிக்குமா...''என்றபடி, 'ஸ்மார்ட் பெஞ்ச்'சில் அமர்ந்தாள் சித்ரா.அருகில் அமர்ந்த மித்ரா, 'வாட்ஸ் ஆப்'பில் வந்த தகவல்களை பார்க்க ஆரம்பித்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X